சென்னையில் தனியார் நிதி நிறுவனங்களில் அமலாக்க துறையினர் சோதனை

சென்னையில் தனியார் நிதி நிறுவனங்களில் அமலாக்க துறையினர் சோதனை
Updated on
1 min read

சென்னை: சென்னையில் 4 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை நேற்று நடைபெற்றது. சென்னையில் ஃபைனான்ஸ் தொழில் நடத்தி வருபவர்கள் தொடர்புடைய இடங்களில் நேற்று காலை முதல் அமலாக்கத் துறை சோதனை நடந்து வருகிறது.

அந்த வகையில், சென்னை வடபழனி துரைசாமி சாலையில் உள்ள ஃபைனான்ஸ் நிறுவனம், வடபழனி வ.உ.சி சாலையில் உள்ள நிறுவனம், வேப்பேரியில் உள்ள ஃபைனான்ஸ் நிறுவனம் மற்றும் அந்த நிறுவனத்தின் உரிமையாளர் வீடு என 4 இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று சோதனையில் ஈடுபட்டனர்.

சட்ட விரோத பண பரிவர்த்தனை புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடந்ததாக கூறப்படுகிறது. எனினும், இதுதொடர்பாக அமலாக்கத் துறை சார்பில் எந்த விவரமும் வெளியிடப்படவில்லை. சோதனை முழுமையாக முடிந்த பிறகு, இதுபற்றிய விவரங்கள் தெரிவிக்கப்படும் என அமலாக்கத் துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in