Published : 13 Mar 2025 06:15 AM
Last Updated : 13 Mar 2025 06:15 AM

ஒயிட்ஸ் சாலை மெட்ரோ ரயில் திட்ட பணிக்காக இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு பிறப்பித்த நோட்டீஸ் ரத்து

சென்னை: ஒ​யிட்ஸ் சாலை மெட்ரோ ரயில் திட்ட பணி​களுக்​காக நில ஆர்​ஜிதம் கோரி யுனைட்​டெட் இந்​தியா இன்​சூரன்ஸ் நிறு​வனத்​துக்கு மெட்ரோ ரயில் நிறு​வனம் அனுப்​பிய நோட்​டீஸை உயர் நீதி​மன்​றம் ரத்து செய்​துள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் 2-ம் கட்ட பணிக்​காக, ஆயிரம்​விளக்கு - ராயப்​பேட்டை ஒயிட்ஸ் சாலை சந்​திப்​பில் உள்ள பழமை​யான ஸ்ரீ ரத்​தின விநாயகர் - துர்க்கை அம்​மன் கோயில் ராஜகோபுரத்தை இடிக்க முடிவு செய்​யப்​பட்​டது. இதை எதிர்த்​து, ‘ஆல​யம் காப்​போம்’ கூட்​டமைப்பு சார்​பில் பி.ஆர்​.ரமணன், உயர் நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடர்ந்​தார்.

இதைத் தொடர்ந்​து, கோயில் பகு​தியை நீதிபதி கே.குமரேஷ்​பாபு, அரசு தலைமை வழக்​கறிஞர் பி.எஸ்​.​ராமன் உள்​ளிட்ட குழு​வினர் ஆய்வு செய்​தனர். பின்​னர், அருகே உள்ள யுனைட்​டெட் இந்​தியா இன்​சூரன்ஸ் நிறுவன தலை​மையகம் உள்ள பகு​திக்கு மெட்ரோ ரயில் நிலைய நுழைவு​வா​யிலை மாற்ற முடிவு செய்​யப்​பட்​டது. இதற்​காக, இன்​சூரன்ஸ் நிறு​வனத்​தின் 837 சதுர மீட்​டர் நிலத்தை ஆர்​ஜிதம் செய்ய கடந்த செப்​. 26-ம் தேதி மெட்ரோ ரயில் நிறு​வனம் நோட்​டீஸ் பிறப்​பித்​தது.

இதை எதிர்த்து உயர் நீதி​மன்​றத்​தில் இன்​சூரன்ஸ் நிறு​வனம் வழக்கு தொடர்ந்​தது. நீதிபதி என்​.ஆனந்த் வெங்​கடேஷ் முன்பு இந்த வழக்கு விசா​ரணைக்கு வந்​தது. யுனைட்​டெட் இந்​தியா இன்​சூரன்ஸ் நிறு​வனம் தரப்​பில் மூத்த வழக்​கறிஞர் விஜய் நாராயண், அரசு தரப்​பில் தலைமை வழக்​கறிஞர் பி.எஸ்​.​ ராமன், மெட்ரோ ரயில் நிறு​வனம் தரப்​பில் வழக்​கறிஞர் பி.​விஜய், ‘ஆல​யம் காப்​போம்’ கூட்​டமைப்பு சார்​பில் வழக்​கறிஞர் ராமமூர்த்தி வாதிட்​டனர்.

அனைத்து தரப்பு வாதங்​களை​யும் கேட்ட நீதிபதி என்​. ஆனந்த் வெங்​கடேஷ், “ஏற்​கெனவே தொடரப்​பட்ட வழக்​கில் யுனைட்​டெட் இந்​தியா நிறு​வனம் ஒரு தரப்​பாக சேர்க்​கப்​பட​வில்​லை. எனவே, அந்த நிறு​வனத்​தின் நிலத்தை கையகப்​படுத்த பிறப்​பிக்​கப்​பட்ட நோட்​டீஸ் ரத்து செய்​யப்​படு​கிறது. பழைய திட்​டப்​படி, கோயில்​கள் இருந்த பகு​தி​யில் நுழைவு​வா​யில்​களை மீண்​டும் மாற்​றி, பணி​களை தொடரலாம்​” என்​று உத்​தர​விட்​டுள்​ளார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x