Published : 12 Mar 2025 05:54 AM
Last Updated : 12 Mar 2025 05:54 AM
சென்னை: சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் சார்பில் பெண் நீதிபதிகளை கவுரவிக்கும் விழா மற்றும் 1,020 இளம் வழக்கறிஞர்களை பார் கவுன்சிலில் பதிவு செய்யும் நிகழ்வு, உயர் நீதிமன்ற கலையரங்கில் நேற்று முன்தினம் நடைபெற்றது.
இவ்விழாவில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி அனிதா சுமந்த் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று இளம் வழக்கறிஞர்களுக்கு அறிவுரை வழங்கினார். அதைத்தொடர்ந்து, நீதிபதி அனிதா சுமந்த் மற்றும் கீழமை நீதிமன்ற பெண் நீதிபதிகளுக்கு பார் கவுன்சில் சார்பில் நிர்வாகிகள் விருது வழங்கி கவுரவித்தனர்.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ், அகில இந்திய பார் கவுன்சில் துணைத் தலைவர் எஸ்.பிரபாகரன், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் இளம் வழக்கறிஞர்கள் பதிவுக்குழுத் தலைவர் கே.பாலு, பார் கவுன்சில் துணைத் தலைவர் வி.கார்த்திகேயன், வழக்கறிஞர் வி.நளினி, பார் கவுன்சில் உறுப்பினர்கள் மூத்த வழக்கறிஞர் ஆர்.விடுதலை, வழக்கறிஞர் ஜெ.பிரிஸில்லா பாண்டியன் உள்ளிட்ட பலர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர். பார் கவுன்சில் இணைத் தலைவர் வழக்கறிஞர் டி.சரவணன் நன்றி கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT