Published : 12 Mar 2025 05:50 AM
Last Updated : 12 Mar 2025 05:50 AM

ஆட்சேபகரமற்ற புறம்போக்கு நிலங்களில் வசிப்போருக்கு பட்டா திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர்

நகர்ப்புற பகுதிகளில் பட்டாக்கள் வழங்கும் திட்டத்தின் கீழ், செங்கல்பட்டு மாவட்டத்தில் ஆட்சேபகரமற்ற அரசு புறம்போக்கு நிலங்களில் குடியிருக்கும் 214 நபர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பட்டாக்கள் வழங்கி, திட்டத்தை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில், அமைச்சர்கள் பொன்முடி, தா.மோ.அன்பரசன், சட்டமன்ற உறுப்பினர்கள் வரலட்சுமி மதுசூதனன், எஸ்.ஆர்,ராஜா, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் எஸ்.அருண்ராஜ் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

செங்கல்பட்டு: ஆட்சேபகரமற்ற புறம்போக்கு நிலங்களில் வசிப்போருக்கு பட்டா வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் செங்கல்பட்டில் நேற்று தொடங்கி வைத்தார். மேலும் பணிகள் முடிவுற்ற அரசுத் துறை கட்​டிடங்​களை​யும் திறந்து வைத்​தார்.

செங்​கல்​பட்டு மாவட்ட காவல் கண்​காணிப்​பாளர் அலு​வல​கம் அரு​கில் நேற்று நடை​பெற்ற அரசு நிகழ்ச்​சி​யில் முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் பங்​கேற்​றார். அதில், ரூ.280.38 கோடி மதிப்​பில் 47 முடிவுற்ற கட்​டிடங்​கள் மற்​றும் நலத்​திட்​ட பணி​களை திறந்து வைத்​தார். தொடர்ந்​து, நகராட்சி நிர்​வாகத் துறை சார்​பில், செங்​கல்​பட்டு மற்​றும் மறைமலைநகர் நகராட்​சி பகு​தி​களில் ரூ.497.06 கோடி மதிப்​பிலான 5 புதிய திட்​ட பணி​களுக்கு அடிக்​கல் நாட்​டி​னார். அதோடு, ரூ.508 கோடி மதிப்​பிலான அரசு நலத்​திட்ட உதவி​களை வழங்​கி​னார்.

மேலும், நகர்ப்​புற பகு​தி​களில் பட்​டாக்​கள் வழங்​கும் திட்​டத்​தின் கீழ், சென்​னை, திரு​வள்​ளூர், காஞ்​சிபுரம் மற்​றும் செங்​கல்​பட்டு ஆகிய மாவட்​டங்​களில் உள்ள பெல்ட் ஏரியா மக்​களுக்கு வீட்​டுமனை பட்டா வழங்​கும் வகை​யில், முதற்​கட்​ட​மாக செங்​கல்​பட்டு மாவட்​டத்​தில் ஆட்​சேபகரமற்ற அரசு புறம்​போக்கு நிலங்​களில் நீண்ட கால​மாக வீடு கட்டி குடி​யிருக்​கும் 214 நபர்​களுக்கு நிலங்​களை வரன்​முறைப்​படுத்தி பட்டா வழங்​கும் திட்​டத்தை முதல்​வர் ஸ்டா​லின் தொடங்கி வைத்​தார்.

​விழா​வில் முதல்​வர் பேசி​ய​தாவது: கடந்த மாதம் நடை​பெற்ற அமைச்​சர​வைக் கூட்​டத்​தில் எடுக்​கப்​பட்ட முடி​வின்​படி, நீண்​ட​கால​மாக, நகர்ப்​புற பகு​தி​யில் வீடு கட்டி குடி​யிருந்து வருபவர்​களுக்கு பட்டா வழங்​கும் திட்​டத்தை தொடங்கி வைத்​துள்​ளேன். தமிழகம் முழு​வதும் இந்த திட்​டத்​தால் பல ஆயிரம் குடும்​பங்​கள் பயனடை​யும்.

தொழில் வளர்ச்​சியை மேலும் ஊக்​குவிக்​கும் வகை​யில், செய்​யூரில் சுமார் 800 ஏக்​கர் பரப்​பள​வில் புதிய சிப்​காட் தொழில் பூங்கா அமைக்​கப்​படும். கடந்த 3 ஆண்​டு​களில் ரூ.10 லட்​சம் கோடிக்​கும் அதி​க​மாக, தனி​யார் முதலீட்​டு திட்​டங்​கள் தமிழகத்​துக்கு வரு​வது உறுதி செய்​யப்​பட்​டுள்​ளது என்​றால், அதற்கு காரணம், நம்​முடைய ஆட்​சி​யின் மீதான நம்​பிக்​கை.

மும்​மொழிக் கொள்​கை​யை, அதாவது இந்​தி, சம்​ஸ்​கிருதத்தை ஏற்​றுக்​கொண்​டால்​தான் தமிழகத்​துக்​கு தரவேண்​டிய ரூ.2 ஆயிரம் கோடியைத் தரு​வோம் என்று திமி​ராகப் பேசுகிறார் மத்​திய அமைச்​சர் தர்​மேந்​திர பிர​தான். தமிழகத்​தின் கல்வி வளர்ச்​சி​யையே மொத்​த​மாக அழித்​து, ஒழித்​து​விடும் என்​ப​தால்​தான் அதை எதிர்க்​கிறோம்.

கல்விக்​குள் மாணவர்​களை கொண்​டுவர முயற்சி செய்​யாமல், கல்​வி​யில் இருந்து அவர்​களை நீக்​கு​வதற்​கான அத்​தனை செயல்​திட்​டங்​களும் தேசிய கல்விக் கொள்​கை​யில் உள்​ளன. அதனால்​தான் அதை ஏற்க மாட்​டோம் என்று சொல்​கிறோம். தமிழகம் இவர்​களின் சதி​களுக்கு எதி​ராக விடா​மல் போராடு​வதை அவர்​களால் தாங்​கிக்​கொள்ள முடிய​வில்​லை. ‘தமிழகத்​தைச் சேர்ந்​தவர்​கள் நாகரி​கம் இல்​லாதவர்​கள், அராஜக​வா​தி​கள் என்​று’ நாடாளு​மன்​றத்​தில் அமைச்​சர் தர்​மேந்​திர பிர​தான் நாவடக்​கம் இல்​லாமல் பேசி​யிருக்​கிறார்.

ஆனால், அரைமணி நேரத்​தில் அவர் பேசி​யதை திரும்​பப்​பெற வைத்​திருக்​கின்​றனர் நமது தமிழக எம்​.பி.க்​கள். அதி​முக உறுப்​பினர்​கள்​போல் பாஜக அரசுக்கு லாலி பாடா​மல் தமிழகத்​தின் உரிமைக்​காக யாருக்​கும் பயப்​ப​டா​மல் போராடு​வோம் என்று நிரூபித்​திருக்​கின்​றனர். இதே போர்க்​குணத்​துடன் தமிழகத்​துக்​காக தொடர்ந்து போராடு​வோம். இவ்​வாறு முதல்​வர் பேசி​னார்.

இவ்​விழா​வில், க.பொன்​முடி உள்​ளிட்ட அமைச்​சர்​கள், காஞ்​சிபுரம் எம்​.பி. க.செல்​வம், எம்​எல்​ஏக்​கள் வரலட்​சுமி மதுசூதனன், எஸ்​.ஆர்​.​ராஜா, கருணாநி​தி, அரவிந்த் ரமேஷ், பாலாஜி, பாபு, வரு​வாய்த் துறை செயலர்​ பெ.அ​மு​தா, மாவட்​ட இந்​து சமய அறங்​காவலர்​ குழு தலை​வர்​ மதுசூதனன்​ உள்​ளிட்​டோர்​ பங்​கேற்​றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x