

மாவட்ட காசநோய் மையங்களில் போதிய மருந்துகள் இருப்பு உள்ளது. காச நோயாளிகளுக்கு தொடர்ந்து மருந்து வழங்கப்படுவ தால் அந்நோய் பரவும் நிலை தமிழகத்தில் இல்லை என்று பேரவையில் சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் மனிதநேய மக்கள் கட்சி உறுப்பினர்கள் ஜவாஹிருல்லா, அஸ்லம் பாஷா ஆகியோர் கொண்டுவந்த கவன ஈர்ப்புத் தீர்மானத்துக்கு பதிலளித்து சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் கூறியதாவது:
தமிழகத்தில் முதல்நிலை காச நோய் மருந்துகள் மத்திய காச நோய் பிரிவிடமிருந்து பெறப்பட்டு சென்னை, திருச்சி ஆகிய இடங் களில் உள்ள மருந்து கிடங்குகளில் இருப்பு வைக்கப்பட்டு உள்ளன.
இந்த கிடங்குகளில் இருந்து அனைத்து மாவட்ட காசநோய் மையங்களுக்கும் காசநோய் மருந்துகள் அனுப்பி வைக்கப்படுகின்றன. இரண்டாம் நிலை காசநோய் மருந்துகளும் தற்போது 6 மாதங்கள் முதல் 7 மாதங்கள் வரை இருப்பில் வைக்கப்பட்டுள்ளன.
அவசரகால நிலையில், காசநோய் மருந்துகள் தேவைப்பட்டால், மாவட்ட காச நோய் அலுவலர் மாநில காசநோய் அலுவலரிடம் செல்போன் மூலம் விடுக்கும் கோரிக்கையின்பேரில், மருந்துகள் உடனடியாக தேவைப்பட்ட மாவட்டங்களுக்கு வழங்கப்படுகின்றன.
காசநோயாளிகளுக்கு போது மான அளவுக்கு மருந்துகள் தொடர்ந்து வழங்கப்படுவதால், அவர்களிடம் இருந்து மற்றவர்களுக்கு அந்நோய் பரவும் நிலை எதுவும் இல்லை