Last Updated : 07 Mar, 2025 04:21 PM

 

Published : 07 Mar 2025 04:21 PM
Last Updated : 07 Mar 2025 04:21 PM

வல்லிபுரம் - ஈசூர் இடையே சேதமடைந்த தரைப்பாலம்: கோடை முடிவதற்குள் மேம்பாலம் அமைக்க கோரிக்கை

வல்​லிபுரம்​-ஈசூர் இடையே பாலாற்​றின் குறுக்கே அமைந்​துள்ள தரைப்​பாலம் வெள்​ளத்​தால் சேதமடைந்​துள்​ளது. இங்​கு, கோடைக்​காலம் நிறைவடைவதற்​குள் உயர்​மட்ட மேம்​பாலம் அமைக்க சுற்​றுப்​புற கிராம மக்​கள் வலி​யுறுத்​தி​ உள்​ளனர்.

செங்​கல்​பட்டு மாவட்​டம் வல்​லிபுரம் மற்​றும் ஈசூர் இடையே அமைந்​துள்ள பாலாற்றை கடந்து செல்​வதற்​காக தரைப்​பாலம் ஒன்று அமைக்​கப்​பட்​டுள்​ளது. இதன்​மூலம், ஆற்​றங்​கரையோரத்​தில் உள்ள கிராம மக்​கள் பல்​வேறு தேவை​களுக்​காக திருக்​கழுக்​குன்​றம் மற்​றும் கருங்​குழி பகு​தி​களுக்கு சென்று வரு​கின்​றனர். இதனிடையே, கடந்த 2 ஆண்​டு​களுக்கு முன்பு பாலாற்​றில் வெள்​ளப்​பெருக்கு ஏற்​பட்​ட​தில் இந்த தரைப்​பாலம் உட்பட பல்​வேறு இடங்​களில் அமைக்​கப்​பட்​டிருந்த தரைப்​பாலங்​கள் முற்​றி​லும் சேதமடைந்​தன.

இதனால், கிராம மக்​களின் போக்​கு​வரத்து கடுமை​யாக பாதிக்​கப்​பட்​டது. பாலாற்​றில் வெள்​ளம் குறைந்​ததும், பொதுப்​பணி மற்​றும் நெடுஞ்​சாலைத்​துறை மூலம் தரைப்​பாலங்​கள் தற்​காலிக​மாக சீரமைக்​கப்​பட்டு வாகன போக்​கு​வரத்து நடை​பெற்று வரு​கிறது.

மேலும், நெடுஞ்​சாலைத்​துறை மூலம் உயர் மட்ட மேம்​பாலம் அமைக்க ரூ.60 கோடி மதிப்​பில் திட்​டம​திப்​பீடு தயாரித்​து, அரசுக்கு பரிந்​துரை செய்​யப்​பட்​டது. ஆனால், இது​வரை​யில் நிதி ஒதுக்​கீடு செய்யாததால் பணி​கள் ஏதும் தொடங்​கப்​ப​டா​மல் உள்​ளது. தற்​போது, தரைப்​பாலத்​தில் பேருந்து உள்​ளிட்ட கனரக வாக​னங்​கள் செல்​வ​தால் மீண்​டும் பாலம் சேதமடை​யும் நிலை​யில் உள்​ளது.

அதனால், பாலாற்​றில் மீண்​டும் வெள்​ளம் ஏற்​பட்​டால் போக்​கு​வரத்து பாதிக்​கப்​ப​டாத வகை​யில், கோடைக்​காலம் நிறைவடைவதற்​குள் பாலாற்​றின் குறுக்க உயர்​மட்ட மேம்​பாலம் அமைக்க வேண்​டும் என வாகன ஓட்​டிகள் மற்​றும் சுற்​றுப்​புற கிராம மக்​கள் கோரிக்கை விடுத்​துள்​ளனர்.

இதுகுறித்​து, வல்​லிபுரம் சுற்​றுப்​புற கிராம மக்​கள் கூறிய​தாவது: சென்​னை-​திருச்சி தேசிய நெடுஞ்​சாலை​யில் வாகன போக்​கு​வரத்​தில் ஏதேனும் பாதிப்பு ஏற்​பட்​டாலோ, சாலை சீரமைப்பு பணி​கள் மேற்​கொள்​ளப்​பட்​டாலோ, சென்னை செல்​லும் வாக​னங்​கள் அனைத்​தும் கருங்​குழி பகு​தியி​லிருந்து மாற்​றுப்​பாதை​யில் வல்​லிபுரம் பாலாற்று தரைப்​பாலத்தை கடந்​து​தான் சென்​னைக்கு செல்​லும் நிலை உள்​ளது.

அதனால், முக்​கிய மாற்​றுப்​பாதை​யான இச்​சாலை​யில் உள்ள தரைப்​பாலத்தை மாற்​றி, கோடைக்​காலம் நிறைவடைவதற்​குள் உயர் மட்ட மேம்​பாலம் அமைக்க வேண்​டியது அவசி​ய​மாகிறது. அதனால், தமிழக அரசு உடனடி​யாக இத்​திட்​டத்தை செயல்​படுத்​தும் வகை​யில் நிதி ஒதுக்க வேண்​டும் என்​றனர்.

திட்​டம​திப்​பீடு தயார்: இதுகுறித்​து, செங்​கல்​பட்டு நெடுஞ்​சாலைத்​துறை அதி​காரி​கள் கூறிய​தாவது: வல்​லிபுரம்​-ஈசூர் இடையே​யான பாலாற்​றின் குறுக்கே அமைந்​துள்ள தரைப்​பாலம் வெள்​ளத்​தில் சேதமடைந்​த​தால், பாலாற்​றின் குறுக்கே உயர்​மட்ட மேம்​பாலம் அமைக்க கடந்த 2 ஆண்​டு​களுக்கு முன்பு ரூ.60 கோடி மதிப்​பில் திட்​டம​திப்​பீடு தயாரிக்​கப்​பட்​டது.

தற்​போது, கூடு​தல் செல​வு​களை இணைத்து ரூ.75 கோடிக்கு திட்​ட ம​திப்​பீடு தயாரித்து அரசுக்கு அனுப்​பி​உள்​ளோம். மேலும், வெள்ள பா​திப்பு மற்​றும் நெடுஞ்​சாலைத்​துறை திட்​டத்​தில் நிதி ஒதுக்க வேண்​டும் என தெரி​வித்​துள்​ளோம்​. விரை​வில்​ அறி​விப்​பு வரும்​ என நம்​புகிறோம்​ என்​றனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x