முடங்​கிய புழு​தி​வாக்​கம் பேருந்து நிலை​யத்தை மீண்​டும் பயன்​பாட்​டுக்கு கொண்​டுவர குடி​யிருப்​போர் நலச் சங்கம் தென்​சென்னை எம்​.பி.யிடம் மனு

முடங்​கிய புழு​தி​வாக்​கம் பேருந்து நிலை​யத்தை மீண்​டும் பயன்​பாட்​டுக்கு கொண்​டுவர குடி​யிருப்​போர் நலச் சங்கம் தென்​சென்னை எம்​.பி.யிடம் மனு
Updated on
1 min read

புழு​தி​வாக்​கம்: முடங்கிய புழுதிவாக்கம் பேருந்து நிலையத்தை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என குடியிருப்போர் நலச் சங்க கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

முடங்கிய காட்சி பொருளாக காணப்படும் புழுதிவாக்கம் பேருந்து நிலையத்தை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என உள்ளகரம்-புழுதிவாக்கம் கூட்டமைப்பு குடியிருப்போர் நல சங்கங்கள் சார்பில் அண்மையில் தென் சென்னை எம்.பி தமிழச்சி தங்கபாண்டியனிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:

சென்னை மாநகராட்சி வார்டு 185-க்கு உட்பட்ட உள்ளகரம், வார்டு 186-க்கு உட்பட்ட புழுதிவாக்கம் பகுதி மக்களுக்கு புழுதிவாக்கம் பேருந்து நிலையம் பெரிதும் பயனுள்ளதாக இருந்தது. இங்கிருந்து 51பி, எம்51ஆர், எஸ்13, எம்1, 554ஏ, எம்270 போன்ற பல நகரப் பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன. தற்போது எந்தப் பேருந்தும் இங்கு வருவதில்லை.

அனைத்தும் வேறு பகுதியில் இருந்து இயக்கப்படுகின்றன. தற்போது பேருந்து நிலையம் முடங்கி, காட்சி பொருளாகவே காணப்படுகிறது. பேருந்து நிலையத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும்.

உள்ளகரம் - புழுதிவாக்கம் மிக வேகமாக வளர்ந்துள்ளதால் மின்சார தேவை அதிகரித்துள்ளது. எனவே இங்கு துணை மின் நிலையம் அமைக்க வேண்டும். துணை மின் நிலையம் அமைப்பதற்கு இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

துணை மின் நிலையம் அமைக்க மின் வாரியத்துக்கு நிலம் மாற்றி வழங்கும் பணி தாமதப்படுத்தப்படுவதால் துணை மின் நிலையம் அமைக்க பணி காலதாமதம் ஆகிறது. விரைவாக நிலம் மின்வாரியத்தின் பெயரில் மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சோழிங்கநல்லூர் வட்டம் மிகப்பெரிய வட்டமாக இருப்பதால் அவற்றை இரண்டாகப் பிரிக்கவும், பள்ளிக்கரணை என்ற பெயரில் புதியதாக வட்டம் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிந்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in