‘விஜய் சினிமாவில் மனிதன் என்றால் பொது வாழ்க்கையில் மாமனிதன்!’ - ஆசிரியர் போராட்டத்தில் தவெக ஆதரவு குரல்கள்

‘விஜய் சினிமாவில் மனிதன் என்றால் பொது வாழ்க்கையில் மாமனிதன்!’ - ஆசிரியர் போராட்டத்தில் தவெக ஆதரவு குரல்கள்
Updated on
2 min read

அதிமுக ஆட்சியில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டம் நடத்தினால் திமுக தலைவர்கள் ஆதரவளித்து வீராவேசமாக பேசுவதும், அதேபோல், திமுக ஆட்சி நடந்தால் அதிமுக தலைவர்கள் ஆதரவளித்து வீராவேசமாக பேசுவதும் கடந்த கால வரலாறு. இப்போது கூடுதலாக தவெக-வும் களத்துக்கு வந்து போராட்டக் களத்தில் இருப்பவர்களுக்காக வசனம் பேச ஆரம்பித்திருக்கிறது.

பள்ளி​களில் 1 முதல் 10-ம் வகுப்பு வரைக்கும் திறமையான ஆசிரியர்களை பணியமர்த்த வேண்டும் என்பதற்காக கடந்த 2012-ம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வை (டெட்) கொண்டு வந்தது மத்திய அரசு. இந்நிலை​யில், 2018-ம் ஆண்டு அதிமுக அரசு, டெட் தேர்வு மட்டும் போதாது, மறு நியமன போட்டித் தேர்வும் எழுத வேண்டும் என அரசாணை 149-ஐ பிறப்​பித்தது.

இந்த அரசாணையை ரத்து செய்யக் கோரி, ‘2013 ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றோர் நலச்சங்கம்’ என்ற பெயரில் புதிதாக ஒரு அமைப்பை ஏற்படுத்தி ஆசிரியர்கள் தொடர் போராட்​டங்களை நடத்தி வருகின்​றனர்.

அதிமுக இந்த அரசாணையை வெளியிட்ட போது எதிர்க்​கட்சி தலைவராக இருந்த ஸ்டாலின், “அரசாணை 149 என்பது இருள் சூழ்ந்த அரசாணை; அர்த்​தமற்ற அரசாணை” என வன்மையாக கண்டித்​ததுடன், “திமுக ஆட்சிக்கு வந்ததும் நிச்சயம் இந்த அரசாணை ரத்து செய்யப்​படும்” என தேர்தலில் வாக்குறு​தியும் கொடுத்​தார்.

ஆனால், ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகள் கடந்த பிறகும் இந்த அரசாணையை ரத்து செய்வது குறித்து யோசிக்கவே இல்லை ஸ்டாலின். மாறாக, கடந்த ஆண்டு திமுக அரசும் ஆசிரியர் மறு நியமன போட்டித் தேர்வை நடத்தியது. இந்நிலை​யில், ‘2013 ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றோர் நலச்சங்கம்’ சார்பில், அரசாணை 149-ஐ ரத்து செய்ய வலியுறுத்தி திருச்​சியில் கடந்த பிப்ரவரி 28-ம் தேதி கவன ஈர்ப்பு ஆர்ப்​பாட்டம் நடைபெற்றது.

அப்போது பேசிய சங்கத்தின் மாநிலத் தலைவர் ம.இளங்​கோவன், “ஸ்டாலின் பிறந்த நாளான மார்ச் 1-ம் தேதி ஆசிரியர்களை முட்டாளாக்கிய தினம். மொத்தத்தில் எதுவும் செய்யாத முதல்வர் மு.க.ஸ்​டா​லினுக்கு எங்கள் ரத்தத்தால் பிறந்​தநாள் வாழ்த்​துகளை தெரிவிக்​கிறோம்” என ஆவேசமாகக் கூறி, ரத்தத்தால் ‘ஹேப்பி பர்த்டே ஸ்டாலின் சார், மறு நியமனத் தேர்வை ரத்து செய்திடு, நாங்கள் மாண்டு போகவா நீ மீண்டும் ஆட்சிக்கு வந்தாய்’ என எழுதப்​பட்​டிருந்த பதாகையை உயர்த்திக் காட்டி​னார்.

தவெக நிர்வாகியான கே.எம்​.​கார்த்திக் இந்தப் போராட்​டத்தில் கலந்து கொண்டு ஆசிரியர்​களுக்கு ஆதரவாக பேசியது பலரையும் வியக்க வைத்தது. போராட்​டத்தில் பங்கெடுத்த சங்கத்தின் தேனி மாவட்ட மகளிரணி செயலாளர் சத்தி​ய​வாணி, “நான் 16 வயதிலிருந்து விஜய் ரசிகை. அவர் சினிமாவில் மனிதன் என்றால், பொதுவாழ்க்​கையில் மாமனிதன். நிச்சயம் அவரால் நமக்கு நல்லது நடக்கும்” என்று பேசி கைதட்​டுகளை அள்ளி​னார்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய சங்கத்தின் மாநிலத் தலைவர் ம.இளங்​கோவன், “நான் மதுரை பழங்காநத்தம் திமுக மாணவரணி துணை அமைப்​பாளராக 8 ஆண்டு​காலம் இருந்​துள்​ளேன். இருந்தும் என்ன பயன்? இந்த ஆட்சியைக் கொண்டுவர நாங்கள் பக்கபலமாக இருந்​துள்​ளோம்.

ஆனால், திமுக ஒன்றிரண்டு பொய்களை சொல்லி ஆட்சிக்கு வரவில்லை. சொன்னது எல்லாமே பொய் தான். நடப்பது கலைஞர் ஆட்சியே இல்லை. தவெக தலைவர் விஜய் எங்களுக்கு ஆதரவளித்தால் நாங்கள் அவருக்கு ஆதரவாக நிற்பதில் தவறில்லை. அதிமுக ஆட்சியில் 28 போராட்​டங்களை நடத்திய நாங்கள், திமுக ஆட்சியில் 52 போராட்​டங்களை நடத்தி உள்ளோம். ‘திமுக-​காரனைத் தவிர்த்து வேறு யாராலும் எங்களை வீழ்த்த முடியாது’ என ஸ்டாலின் கூறுவர். இப்போது போராடி வரும் நாங்கள் அனை​வரும் ஒரு காலத்தில் திமுக-​காரர்கள் தான் என்பதை அவர் உணர வேண்​டும்” என்​றார்​

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in