

திருச்சி: திருச்சி கருமண்டபம் பகுதியை சேர்ந்தவர் கவிஞர் நந்தலாலா (70). இந்தியன் வங்கியில் பணியாற்றி ஓய்வுபெற்ற இவர், தமுஎகச மாநிலத் துணைத் தலைவராகவும், தமிழக அரசின் இயல், இசை, நாடக மன்றப் பொதுக்குழு உறுப்பினராகவும் இருந்தவர்.
பல்வேறு நூல்களை எழுதியுள்ள நந்தலாலா, உடல் நலக்குறைவு காரணமாக பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று காலமானார். அவருக்குமனைவி ஜெயந்தி, மகள்கள் பாரதி, நிவேதிதா உள்ளனர். நந்தலாலா மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், திக தலைவர் கி.வீரமணி, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், தமாகா தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.