சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கலின்போதே முதல் முறையாக பொருளாதார ஆய்வு அறிக்கை

சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கலின்போதே முதல் முறையாக பொருளாதார ஆய்வு அறிக்கை
Updated on
1 min read

சென்னை: தமிழக சட்டப்​பேர​வை​யில் வரும் 14-ம் தேதி பட்ஜெட் தாக்​கலின் போதே முதல் முறையாக பொருளாதார ஆய்வு அறிக்கை சமர்ப்​பிக்​கப்​பட​வுள்​ளது.

தமிழக சட்டப்​பேர​வை​யின் பட்ஜெட் கூட்டத் தொடர் வரும் 14-ம் தேதி தொடங்குகிறது. அன்றைய தினம், காலை 9.30 மணிக்கு 2025-26-ம் ஆண்டுக்கான தமிழக பட் ஜெட்டை நிதி​யமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்ய​ உள்​ளார். அன்றைய தினமே பொருளாதார ஆய்வறிக்கை சமர்ப்​பிக்​கப்பட உள்ளது. தமிழக அரசு முதன் முறையாக இதுபோன்ற பொருளாதார ஆய்வு அறிக்கையை தாக்கல் செய்​கிறது.

இந்த ஆய்வு அறிக்கை​யில் கடந்​தாண்டு, நடப்​பாண்டு பொருளா​தாரம் நிலை, விலை​வாசி, பணவீக்கம் போன்ற​வைகள் இடம்​பெற்றுள்ளன. பொருளாதார ஆய்வு அறிக்கை இரண்டு பகுதிகளை கொண்டு இருக்​கும் என்று கூறப்​படு​கிறது. அரசின் நிதி​நிலை, உள்நாட்டு உற்பத்தி, செயல்​படுத்தி வரும் திட்​டங்​களின் நிலை, வரும் ஆண்டு​களில் மாநில அரசின் நி​தி​நிலை உள்​ளிட்ட பல்​வேறு தர​வு​கள் இந்த பொருளா​தார ஆய்வு அறிக்கை​யில் இடம்​பெற்​று இருக்​கும்​.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in