திமுக நிர்வாகி பேச்சுக்கு அரசு ஊழியர் சங்கம் கண்டனம்

திமுக நிர்வாகி தர்மச்செல்வன்
திமுக நிர்வாகி தர்மச்செல்வன்
Updated on
1 min read

தருமபுரி: திமுக தருமபுரி மாவட்ட நிர்வாகி பேச்சுக்கு அரசு ஊழியர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

நான் சொல்வதை கலெக்டர், எஸ்.பி. ஆகியோர் கேட்க வேண்டும் என்று திமுக மாவட்டச் செயலாளர் பேசியதாக வெளியாகி உள்ள ஆடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க தருமபுரி மாவட்ட மையம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

திமுக நிர்வாகி தர்மச்செல்வனின் கண்ணியமற்ற பேச்சு, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது. அரசு ஊழியர்களு டன் இணக்கமான மற்றும் கண்ணியமான போக்கை கடைப்பிடிக்க வேண்டும் என்ற அடிப்படை நாகரிகத்தை புறந்தள்ளும் வகையில் இந்தப் பேச்சு உள்ளது.

ஒரு மாவட்டத்தின் நிர்வாகத் தலைவரான ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் என அனைவரையும் தரக்குறைவாகப் பேசியுள்ளதை அரசு ஊழியர் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது.

அரசு ஊழியர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ள இந்தப் பிரச்சினையில் தமிழக முதல்வர் தலையிட்டு, வருங்காலத்தில் இதுபோன்ற கண்ணியமற்ற, தரம் குறைந்த பேச்சு களை ஆளுங்கட்சியினர் உட்பட எந்த அரசியல் கட்சியினரும் பேசாமல் இருக்கும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், தருமபுரி திமுக நிர்வாகி தர்மச்செல்வன் தன் பேச்சுக்கு மன்னிப்பும், வருத்தமும் தெரிவிக்க வேண்டும்.

திமுக நிர்வாகியைக் கண்டித்து வரும் 4-ம் தேதி தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடைபெறும். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in