

கும்பகோணம்: தஞ்சை கும்பகோணம் அருகே நாச்சியார் கோவில் வீரராகவபுரத்தை சேர்ந்தவர் சேகர் என்கிற கோ.சந்திரசேகர் (65). தலைசிறந்த ஓவியரான இவர், கடந்த 30 ஆண்டுகளாக சேகர் என்ற பெயரில் பிரபல நாளிதழ்கள், வார, மாத இதழ்களில் ஓவியங்கள் வரைந்து வந்தார்.
இந்நிலையில், உடல் நலக்குறைவு காரண மாகதனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இவர் நேற்று பிற்பகல் காலமானார். இவரது இறுதிச்சடங்குகள் நாச்சியார் கோவில் வீரராகவபுரத்தில் உள்ள இல்லத்தில் இன்று (மார்ச்2) பிற்பகல் நடைபெறுகிறது. இவருக்கு மகாலட்சுமி என்ற மனைவி உள்ளார்.