

எபோலா வைரஸ் நோயாளி களுக்கு உடனடி அவசர சிகிச்சை அளிக்க தயார் நிலையில் இருக்கு மாறு அனைத்து அரசு மருத்து வக் கல்லூரி மருத்துவமனை களின் டீன்களுக்கும் பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள் ளது. விமான நிலையங்களில் வந்திறங்கும் பயணிகளுக்கு இந்நோய் இருக்கிறதா என்று பரிசோதனை செய்ய சிறப்பு சுகாதார குழுக்கள் அமைக்கப் பட்டுள்ளன.
மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ‘எபோலா (Ebola) வைரஸ்’ வேகமாக பரவி வருகிறது. எபோலோ தொற்று நோய்க்கு சரியான சிகிச்சை இல்லாததால், பன்றிக் காய்ச்சலைப் போல இது உலகையே அச்சுறுத்தத் தொடங் கியுள்ளது. இந்த கொடிய நோய் தாக்கியதில், இதுவரை சுமார் 670 பேர் உயிரிழந்துள் ளனர். இந்த நோய் மற்ற நாடு களுக்கும் வேகமாக பரவத் தொடங்கியுள்ளதால் நோய் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடு மாறு சர்வதேச நாடுகளை உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.
சிறப்பு குழுக்கள் அமைப்பு
அதன்படி, எபோலா வைரஸ் பரவாமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை களை பல நாடுகள் எடுத்துள்ளன. இந்தியாவிலும் சர்வதேச விமான நிலையங்களில் முன்னெச் சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் சென்னை மீனம்பாக்கம் உள்ளிட்ட சர்வதேச விமான நிலையங்களில் தேசிய நோய் கட்டுப்பாட்டு மையம் (என்சிடிசி), புனே தேசிய வைராலஜி மையம் (என்ஐவி), தமிழக பொது சுகாதாரத் துறை (டிபிஎச்) மற்றும் விமான நிலைய சுகாதர மைய அதிகாரி கள் குழுவினர் அடங்கிய சிறப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள் ளது.
மேற்கு ஆப்பிரிக்கா உள்ளிட்ட எபோலா நோய் பாதிப் புள்ள நாடுகளில் இருந்து வருப வர்களை பரிசோதித்த பிறகே வெளியே அனுப்புகின்றனர்.
இதுதொடர்பாக தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குநர் (டிபிஎஸ்) குழந்தைசாமி கூறியதாவது:
தமிழகத்தில் எபோலா வைரஸ் பரவாமல் தடுக்க, முன்னெச்சரிக்கையாக சர்வதேச விமான நிலையங்களில் சுகாதார குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதுவரை எபோலா வைரஸ் பாதிப் புடன் யாரும் தமிழகத்துக்குள் வரவில்லை. அப்படி யாராவது வந்தால், அவருக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளன. எபோலா வைரஸ் நோயாளிகளுக்கு உடனடியாக அவசர சிகிச்சை அளிக்க தயார் நிலையில் இருக்க வேண்டும் என அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளின் டீன்களுக்கும் உத்தரவிட்டுள் ளோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.