Published : 26 Feb 2025 06:25 AM
Last Updated : 26 Feb 2025 06:25 AM
சென்னை: மும்மொழி கொள்கைக்கு எதிராக தமிழகம் முழுவதும் மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நேற்று ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. மாவட்டத் தலைநகரங்களில் மத்திய அரசு அலுவலகங்களை முற்றுகையிட்டும், பேரணி நடத்தியும் மாணவர் அமைப்புகள் கண்டனங்கள் தெரிவித்தன.
இதன் ஒருபகுதியாக சென்னை ஆட்சியர் அலுவலகம் அருகில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு திமுக மாணவரணி மாநில துணைச் செயலாளர் அமுதரசன் தலைமை தாங்கினார். இதில் இந்திய மாணவர் சங்கம், மதிமுக மாணவரணி, திராவிட மாணவர் கழகம், சமூக நீதி மாணவர் இயக்கம், முற்போக்கு மாணவர் கழகம் உள்ளிட்ட அமைப்பினர் பங்கேற்று மும்மொழிக் கொள்கையை திணிக்கக் கூடாது, மத்திய அரசு நிதி வழங்க வேண்டும் என முழக்கமிட்டனர்.
முன்னதாக சைதாப்பேட்டையில் பஜார் சாலை, ஜோன்ஸ் சாலை வழியாக பேரணியாக சென்ற மாணவ அமைப்பினர், துணை தபால் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். அடையாறு பிஎஸ்என்எல் அலுவலகம், திருவொற்றியூர் தபால் நிலையம், தண்டையார்பேட்டை தபால் நிலையம் அருகிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT