Published : 26 Feb 2025 07:39 AM
Last Updated : 26 Feb 2025 07:39 AM

தமிழ் மொழியை அழித்ததில் திராவிடக் கட்சிகளுக்கும் பங்குண்டு: சீமான்

ஆற்காடு: ராணிப்​பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த திமிரி​யில் நேற்று நடைபெற்ற கட்சி ஆலோசனைக் கூட்​டத்​தில் பங்கேற்ற நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்​கிணைப்​பாளர் சீமான், செய்தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: நாம் தமிழர் கட்சி ஜனநாயகம் உள்ள கட்சி. இதன் கொள்​கையை ஏற்று வருபவர்​கள், பின்னர் முரண்​பாடு காரணமாக வெளி​யேறுகிறார்​கள். இது கட்சி பிரச்​சினை. இதை நாங்கள் பார்த்​துக்​கொள்​கிறோம். தமிழகத்​தில் வலுக்​கட்​டாயமாக இந்தி​யை திணிக்​கும் முயற்​சியை மத்திய பாஜக அரசு கைவிட வேண்​டும். பிற மாநிலங்கள் ஏற்கிறது என்ப​தற்​காக, நாங்​களும் இந்தியை ஏற்க வேண்​டும் என்பது அவசி​யமில்லை. தமிழகத்​தில் என்னை மீறி இந்தியை திணித்​துக் காட்டுங்கள் பார்ப்​போம். பாஜக​வுடன் சேர்ந்து, தமிழ் மொழியை அழித்​ததில் திரா​விடக் கட்சிகளுக்​கும் பங்குண்டு.

ஜாக்​டோ-ஜியோ அமைப்​பினர் நியாயமான கோரிக்கைகளை முன்​வைத்​து போராடு​கின்​றனர். தேர்தல் வரும் நேரத்​தில் முதல்​வர் மருந்​தகம் என்பது, மக்களிடம் வாக்​குகளை பெறு​வதற்கான திட்​ட​மாகும். நோய் வந்த பிறகு மருந்து கொடுப்​ப​தை​விட, தூய காற்று, குடிநீர் மற்றும் நஞ்சில்லா உணவை கொடுக்​கும் திட்​டங்​களை செயல்​படுத்த வேண்​டும். பெரி​யார் குறித்து நான் அவதூறாக பேசவில்லை. அவர் பேசியதையே எடுத்​துக் கூறினேன். வரும் 2026 சட்டப்​பேர​வைத் தேர்தல் பணிகளை ஏற்கெனவே தொடங்கி​விட்​டோம். இவ்​வாறு சீ​மான்​ கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x