Published : 26 Feb 2025 06:58 AM
Last Updated : 26 Feb 2025 06:58 AM

9 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: கேரளா​வில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தஞ்சாவூர், ராமநாத​புரம் உள்ளிட்ட 9 மாவட்​டங்​களில் நாளை (பிப். 27) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரி​வித்​துள்ளது.

இது தொடர்பாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய விஞ்​ஞானி பா.கீதா நேற்று வெளி​யிட்ட செய்திக்​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: தெற்கு கேரளா மற்றும் அதையொட்டிய பகுதி​களின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவு​கிறது. இதன் தாக்​கத்​தால் தென்​தமிழக கடலோர மாவட்​டங்​கள், டெல்டா மாவட்​டங்​களில் ஓரிரு இடங்​களி​லும், காரைக்​கால் பகுதி​களி​லும் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்​யக்​கூடும். இதர தமிழக மாவட்​டங்கள் மற்றும் புதுச்​சேரி​யில் வறண்ட வானிலை நிலவக்​கூடும். காலை நேரத்​தில் லேசான பனிமூட்டம் காணப்​படும்.

நாளை தஞ்சாவூர், திரு​வாரூர், நாகப்​பட்​டினம், மயிலாடு​துறை, புதுக்​கோட்டை, ராமநாத​புரம், தூத்​துக்​குடி, திருநெல்​வேலி, கன்னி​யாகுமரி மாவட்​டங்​களில் ஓரிரு இடங்​களில் கனமழை பெய்ய வாய்ப்புள்​ளது. மேலும், இதே மாவட்​டங்​களில் சில இடங்​களில் வரும் மார்ச் 1-ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்புள்​ளது.

தமிழகத்​தில் இன்று அதிகபட்ச வெப்​பநிலை ஓரிரு இடங்​களில் 35.6-37.4 டிகிரி பாரன்​ஹீட் அளவில் இருக்​கும். நாளை முதல் வரும் 1-ம் தேதி வரை அதிகபட்ச வெப்​பநிலை சற்றே குறையக்​கூடும். சென்னை மற்
றும் புறநகர் பகுதி​களில் வானம் ஓரளவு மேகமூட்​டத்​துடன் காணப்​படும். அதிகபட்ச வெப்​பநிலை 89.6-91.4 டிகிரி, குறைந்​த​பட்ச வெப்​பநிலை 73.4-75.2 டிகிரி பாரன்​ஹீட் அளவில் இருக்​கும்.

தென்​தமிழக கடலோரப் பகுதி​கள், மன்னார் வளைகுடா மற்றும் அதையொட்டிய குமரிக்​கடல் பகுதி​களில் இன்று முதல் வரும் 28-ம் தேதி வரை இன்றும், நாளை​யும் மணிக்கு 35 முதல் 45 கி.மீ. வேகத்​தி​லும், இடையிடையே 55 கி.மீ. வேகத்​தி​லும் சூறாவளிக் காற்று வீசக்​கூடும். எனவே, இப்பகு​தி​களுக்கு மீனவர்​கள் செல்ல வேண்​டாம் என அறி​வுறுத்​தப்​படு​கிறார்​கள். இவ்​வாறு செய்திக்​குறிப்​பில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x