Published : 26 Feb 2025 05:30 AM
Last Updated : 26 Feb 2025 05:30 AM
சென்னை: சென்னை மாநகராட்சியின் இணையவழி சேவைகள், பராமரிப்புப் பணிக்காக 3 நாட்கள் நிறுத்தப்படுகிறது.
இதுகுறித்து சென்னை மாநகராட்சி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘சென்னை மாநகராட்சியின் இணையவழி சேவைகள் அனைத்தும் பராமரிப்புப் பணி காரணமாக பிப்.28 (வெள்ளிக்கிழமை) இரவு 10 மணி முதல் மார்ச் 2 (ஞாயிற்றுக்கிழமை) இரவு 10 மணி வரை நிறுத்தம் செய்யப்படுகிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT