Published : 26 Feb 2025 06:19 AM
Last Updated : 26 Feb 2025 06:19 AM

தொகுதி மறுசீரமைப்பு விவகாரம்: மார்ச் 5ல் அனைத்துக் கட்சி கூட்டம் - முதல்வர் ஸ்டாலின் அழைப்பு

சென்னை: நாடாளு​மன்ற தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக வரும் மார்ச் 5-ம் தேதி அனைத்து கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க அழைப்பு​விடுத்து 40 கட்சிகளின் தலைவர்​களுக்கு முதல்வர் ஸ்டா​லின் கடிதம் அனுப்​பி​யுள்​ளார்.

2025-26-ம் நிதி​யாண்​டுக்கான தமிழக அரசின் பட்ஜெட் வரும் மார்ச் 24-ம் தேதி சட்டப்​பேர​வை​யில் தாக்கல் செய்​யப்பட உள்ளது. இதையொட்டி வேளாண் பட்ஜெட் மற்றும் துறைகள் தோறும் மானிய கோரிக்கைகள் மீதான விவாத​மும் நடைபெற உள்ளது. இதற்கு சட்டப்​பேரவை செயலகம் தயாராகி வரும் நிலை​யில், நேற்று பட்ஜெட் ஒதுக்​கீடு​கள், புதிய திட்​டங்​களுக்கு ஒப்புதல் அளிப்​ப​தற்காக தமிழக அமைச்​சர​வைக் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்​டா​லின் தலைமை​யில் நடைபெற்​றது. காலை 11.45 மணிக்கு தொடங்கிய அமைச்​சர​வைக் கூட்டம் 12.30 மணிக்கு முடிவுற்​றது.

அதன் பிறகு செய்தி​யாளர்களை சந்தித்த முதல்வர் மு.க.ஸ்​டா​லின் கூறிய​தாவது: இன்றைய அமைச்​சர​வைக் கூட்​டத்​தில், நிதி​நிலை அறிக்கை தொடர்பாக பல்வேறு கருத்துகளை துறை​களின் அமைச்​சர்​கள், அதிகாரிகள் வலியுறுத்​தி​யுள்​ளனர்.

இதுதவிர ஒரு முக்​கியமான முடிவு எடுத்​துள்ளோம். தமிழகம் இன்று மிகப்​பெரிய உரிமைப் போராட்​டத்தை நடத்த வேண்டிய சூழலுக்கு தள்ளப்​பட்​டுள்​ளது. எனவே, வரும் மார்ச் 5-ம் தேதி அனைத்து கட்சிக் கூட்டம் நடத்​தப்​படு​கிறது. தேர்தல் ஆணையத்​தில் பதிவு பெற்ற 40 கட்சிகளை அழைக்க முடி​வெடுத்து அவர்​களுக்கு கடிதம் அனுப்ப உள்ளோம்.

தொகுதி மறு சீரமைப்பு தொடர்பாக இந்த கூட்டம் நடத்​தப்​படு​கிறது. தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் தென்னிந்திய மாநிலங்​களின் மீது கத்தி தொங்​கு​கிறது. அனைத்து வளர்ச்​சிக் குறி​யீடு​களி​லும் முதன்மை மாநிலமாக திகழும் தமிழகம் கடுமையாக பாதிக்​கப்பட உள்ளது. தமிழகத்​தில் தற்போது 39 மக்களவை தொகு​திகள் உள்ளன. இந்த தொகு​திகளை குறைக்​கும் அபாயம் ஏற்பட்​டுள்​ளது. மத்திய அரசு வரும் 2026-ல் மக்களவை தொகு​திகளை மறுசீரமைப்பு செய்ய உள்ளது.

பொது​வாக, இது மக்கள் தொகை அடிப்​படை​யில்​தான் மேற்​கொள்​ளப்​படு​கிறது. மக்கள் தொகையை கட்டுப்​படுத்துவது என்பது இந்தியா​வின் மிக முக்​கியமான இலக்கு. அந்த இலக்கை பொறுத்​தவரை தமிழகம் வெற்றி பெற்றுள்ளது என்பது அனைவரும் அறிந்த ஒன்று. பல ஆண்டு​களாக வெற்றிகரமான குடும்ப கட்டுப்​பாடு, பெண்கள் கல்வி மற்றும் சுகாதார முன்​முயற்சிகள் மூலம் இதை சாதித்​துள்ளோம். மக்கள் தொகை குறைவாக இருக்​கும் காரணத்​தினாலேயே நாடாளுமன்ற உறுப்​பினர்​களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டிய சூழல் ஏற்பட்​டுள்​ளது. தற்போது நாடு முழு​வதும் உள்ள மக்கள் தொகை அடிப்​படை​யில் தொகு​திகளை பிரித்​தால், தமிழகத்​தில் உள்ள தொகு​தி​களில் 8 தொகு​திகளை இழக்க வேண்டிய சூழல் ஏற்பட்​டுள்​ளது.

அதன்​படி, தமிழகத்​தில் 39 உறுப்​பினர்கள் இருக்க மாட்​டார்​கள், 31 உறுப்​பினர்கள் தான் இருப்​பார்​கள். இன்னொரு முறை​யில் நாட்​டில் உள்ள ஒட்டுமொத்த எம்.பி.க்கள் எண் ணிக்கையை உயர்த்தி, அதற்​கேற்ப பிரித்​தா​லும் நமக்கு இழப்பு தான் ஏற்படும். நமக்கான பிரதி​நி​தித்துவம் குறைந்​து​விடும். அதிக மக்கள் தொகை உள்ள மாநிலங்​களுக்கு பிரதி​நி​தித்துவம் கிடைக்​கும். இதனால், தமிழகத்​தின் குரல் நசுக்​கப்​படும். இது உறுப்​பினர்கள் எண்ணிக்கை மட்டுமல்ல மாநிலத்​தின் உரிமையை சார்ந்தது என்பதை நாம் மறந்​து​விடக்​கூடாது. தமிழகம் எதிர்​கொள்ள உள்ள இந்த முக்​கியமான பிரச்​சினை​யில், தமிழத்​தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் தலைவர்களை ஒன்றிணைக்க முதல் கட்டமாக இக்
கூட்​டத்​துக்கு ஏற்பாடு செய்​துள்ளோம். அனைத்து கட்சிகளும் கட்சி, அரசியலை கடந்து இந்த விவாதத்​தில் பங்கேற்று கருத்துகளை தெரிவிக்க வேண்​டும். இவ்வாறு அவர் தெரி​வித்​தார்.

தொடர்ந்து செய்தி​யாளர்கள் கேள்வி​களுக்கு அவர் அளித்த பதில்​கள்:

அனைத்து கட்சி கூட்​டத்​தில் மும்​மொழிக் கொள்கை குறித்து விவா​திக்​கப்​படுமா?

மும்​மொழிக் கொள்கை மட்டுமல்ல, நீட் பிரச்​சினை, மாநில அரசுக்கு தரவேண்டிய நிதி தொடர்பான பிரச்​சினை உள்ளிட்ட எல்லா பிரச்​சினை​களுக்​கும் தீர்வு காண வேண்​டு​மானால், நமது எம்.பி.க்கள் எண்ணிக்கை அதிகமாக இருக்க வேண்​டும். அப்போது தான் குரல் கொடுக்க முடி​யும். எனவே, அதுதான் முக்​கியமாக விவா​திக்​கப்​படும்.

மொழிக்​கொள்கை உள்ளிட்ட பல்வேறு பிரச்​சினைகள் தொடர்பாக நீங்கள் தொடர்ந்து கடிதம் எழுதுகிறீர்​கள், அரசியல் கட்சிகளும் போராட்​டங்களை நடத்து​கின்றன. மத்திய அரசிடம் இருந்து ஏதேனும் பதில் கிடைத்​துள்ளதா?

ஒரு பதிலும் கிடைக்க​வில்லை. அமைதி​யாகத்​தான் இருக்​கின்​றனர்.

அனைத்து கட்சி கூட்​டத்தை கூட்​டி​யுள்​ளீர்​கள். தொடர்ந்து நீங்கள் முயற்சி எடுத்​தும் தொய்வு காணப்​படு​கிறதே. ஒற்றுமை​யில்லாத சூழல் இருக்​கும் நிலை​யில், அதிமுக​விடம் இதுகுறித்து வலியுறுத்து​வீர்​களா?

இந்த விஷயத்​தில் அவர்கள் குரல் கொடுப்​பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

தேசிய கல்விக் கொள்கை, மும்​மொழிக் கொள்​கையை ஏற்க மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது. 1965-ம் ஆண்டு​போல் மீண்​டும் ஒரு மொழிப்​போருக்கு மத்திய அரசு வித்​திடு​கிறது என்று நீங்கள் நினைக்​கிறீர்​களா?

நிச்​சயமாக வித்​திடு​கிறது, நாங்கள் அதற்கு தயாராக உள்ளோம்.

இவ்வாறு முதல்வர் ஸ்டா​லின் பதில் அளித்​தார்.

முதல்வர் கடிதம்: இந்நிலை​யில், அனைத்து கட்சி கூட்டம் தொடர்பாக கட்சித் தலைவர்​களுக்கு முதல்வர் ஸ்டா​லின் எழுதிய கடிதத்​தில் கூறியிருப்பதாவது:

தற்​போதைய தொகு​தி​களின் எண்ணிக்கை​யின் அடிப்​படை​யில்கூட பல்வேறு நியாயமான கோரிக்கைகளை தமிழகம் பெற முடிய​வில்லை. இந்நிலை​யில் தமிழகத்​தின் மக்கள​வைத் தொகு​திகள் எண்ணிக்கை மேலும் குறைக்​ கப்​பட்​டால் தமிழகத்​தின் குரல்வளை முழு​மையாக நசுக்​கப்​படும். இது மட்டுமின்றி, தமிழகத்​தின் நலன் சார்ந்த பல்வேறு கொள்கை முடி​விலும், மத்திய அரசின் நடவடிக்கைகள் நமது உரிமை​யைப் பறிப்​ப​தாகவே அமைந்​துள்ளன. இந்த கடுமையான விளைவுகளை கருத்​தில் கொண்டு, மக்கள​வைத் தொகுதி மறுசீரமைப்பு முறை, நமது மாநிலத்தை பாதிக்காத வகையில் செயல்​படுத்​தப்​படுவதை உறுதிப்​படுத்த வேண்​டும். இதற்காக நாம் அனைவரும் ஒன்று சேர வேண்டிய காலமிது. இந்த கூட்டு முயற்சிக்கு உங்கள் ஒத்துழைப்பை கோரு​கிறேன். நாம் அனைவரும் ஒன்றாக கலந்​தாலோ​சித்து மாநிலத்​தின் நலன் காப்​ப​தற்கான ஒருமித்த கருத்து​களின் அடிப்​படை​யில் தகுந்த உத்திகளை தீட்​டிச் செயல்​படுத்த அழைப்பு விடுக்​கிறேன் என தெரி​வித்​துள்ளார்.

நாடாளு​மன்ற தொகுதி மறு சீரமைப்பு மூலம் தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, தெலங்​கானா, கர்நாடகா, கேரள மாநிலங்​களில் தொகு​தி​களின் எண்ணிக்கை குறை​கிறது. அதே நேரம், வட மாநிலங்​களில் தொகுத எண்ணிக்கை அதிகரிக்கிறது. இந்நிலை​யில், கடந்​தாண்டு பிப். 13-ல்
சட்​டப்​பேர​வை​யில், முதல்​வர் ​ஸ்​டா​லின் ஒரே நாடு ஒரே தேர்​தல் மற்றும் நாடாளு​மன்ற தொகுதி மறுசீரமைப்​பால் தமிழகத்​துக்கு ஏற்​படும் பா​திப்புகளை சுட்​டிக்காட்டி 2 தீர்​மானங்களை நிறைவேற்​றி மத்​திய அரசுக்​கு அனுப்​பியது குறிப்​பிடத்​தக்​கது..

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x