தவெக ஆண்டு விழாவில் பங்கேற்பீர்களா? - புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியின் பதில்!

முதல்வர் ரங்கசாமி | கோப்புப்படம்
முதல்வர் ரங்கசாமி | கோப்புப்படம்
Updated on
1 min read

புதுச்சேரி: “நாளை (பிப்.26) நடைபெறவுள்ள தவெக ஆண்டு விழா சிறக்க வாழ்த்துகிறேன்,” என்று புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி கூறியுள்ளார்.

தமிழகத்தில் தற்போது தவெகவைத் தொடங்கி ஓராண்டு நிறைவு செய்துள்ள நடிகர் விஜய் முதல்வர் ரங்கசாமிக்கு நெருக்கமானவர். கடந்த சட்டமன்றத் தேர்தல் முடிந்த பிறகு சென்னையில் நடிகர் விஜய்யை முதல்வர் ரங்கசாமி நேரில் சந்தித்து பேசினார். முதல்வர் என்று காட்டிக்கொள்ளாமல் தனக்கு நெருக்கமானவர் என்ற அடிப்படையில் ரங்கசாமி நேரில் சென்று விஜய்யை சந்தித்தார்.

அதன்பிறகு நடிகர் விஜய், முதல்வர் ரங்கசாமியிடம் தொடர்ந்து பேசி வருகிறார்.இவர்களுக்கு இணைப்பாக தவெக பொதுச்செயலர் ஆனந்த் செயல்பட்டு வருகிறார். நடிகர் விஜய் கட்சி தொடங்கும்போது அதற்கு பல்வேறு ஆலோசனைகளை முதல்வர் ரங்கசாமி வழங்கினார்.இதனால் ரங்கசாமி - விஜய் இடையே சுமுகமான உறவு இருந்து வருகிறது.

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ளார். எனினும் நடிகர் விஜய்யின் தவெக கட்சியின் ஆண்டு விழா நாளை (பிப்.26) மாமல்லபுரத்தில் நடக்கிறது.இதில் பங்கேற்க முதல்வர் ரங்கசாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. இதனையடுத்து முதல்வர் ரங்கசாமி தவெக ஆண்டு விழாவில் பங்கேற்பாரா? என்ற கேள்வி எழுந்தது.

புதுவை சட்டப்பேரவையில் இதுகுறித்து முதல்வர் ரங்கசாமியிடம், தவெக ஆண்டு விழாவில் பங்கேற்கிறீர்களா ? எனகேட்டதற்கு “அவர்கள் மாநாடு நடத்துகிறார்கள். தவெக கட்சி மாநாடு சிறக்க வாழ்த்து தெரிவிக்கிறேன்” என பதில் அளித்தார்.இதன் மூலம் தவெக ஆண்டு விழாவில் முதல்வர் ரங்கசாமி பங்கேற்கமாட்டார் என தெரிகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in