

போலீஸ் அதிகாரிகள் மீதான பாலியல் புகாரை விசாரிக்கும் விசாகா கமிட்டிக்கு புதிய உறுப்பினர் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழக காவல் துறையில் போலீஸ் அதிகாரிகள் மீதான பாலியல் புகார்களை விசாரிப்பதற்காக தமிழக அரசு விசாகா கமிட்டியை அமைத்துள்ளது. அந்த கமிட்டியின் தலைவராக டிஜிபி சீமா அகர்வால் (சிவில் சப்ளை சிஐடி பிரிவு) உள்ளார். சென்னை தலைமையிடத்து கூடுதல் காவல் ஆணையர் கபில் குமார் சி.சரத்கர், ஐ.ஜி சாமுண்டீஸ்வரி உட்பட 6 பேர் இந்த கமிட்டியில் உறுப்பினர்களாக உள்ளனர்.
உறுப்பினர்களில் ஒருவராக இருந்த சென்னை உளவு (நுண்ணறிவு) பிரிவு துணை ஆணையர் சக்தி கணேசன் அயல் பணியாக மத்திய அரசு பணிக்கு அண்மையில் மாறுதலாகி சென்றார். அந்த பணியிடத்துக்கு தற்போது எஸ்.பி சண்முகப் பிரியா புதிதாக நியமிக்கப்பட்டுள்ளார்.