அரசு ஊழியர் சங்கங்களின் கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்க முதல்வர் குழு அமைப்பு!

அரசு ஊழியர் சங்கங்களின் கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்க முதல்வர் குழு அமைப்பு!
Updated on
1 min read

சென்னை: தமிழக அரசு ஊழியர்கள் சங்கங்களின் பல்வேறு கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்க, அமைச்சர்கள் அடங்கிய ஒரு குழுவை அமைத்து முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக அரசு சார்பில் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில், “பல்வேறு தமிழ்நாடு அரசு அலுவலர் சங்கங்களின் கோரிக்கைகளை பரிசீலித்து அவற்றின் மீது உரிய முடிவுகளை காணும் பொருட்டு முதல்வர் மு.க. ஸ்டாலின், அமைச்சர்கள் அடங்கிய ஒரு குழுவினை அமைத்து ஆணையிட்டுள்ளார்.

இந்தக் குழுவில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ. வ. வேலு, நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். அரசு ஊழியர் சங்கங்களின் கோரிக்கைகள் குறித்து சங்க நிர்வாகிகளுடன் நாளை தலைமை செயலகத்தில் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in