சொன்னபடியே எக்ஸ் தளத்தில் ‘#கெட்​-அவுட் ஸ்டாலின்’ பதிவிட்ட அண்ணாமலை!

சொன்னபடியே எக்ஸ் தளத்தில் ‘#கெட்​-அவுட் ஸ்டாலின்’ பதிவிட்ட அண்ணாமலை!
Updated on
1 min read

சென்னை: ஏற்கெனவே அறிவித்தபடி இன்று காலை சரியாக 6 மணிக்கு தனது எக்ஸ் சமூகவலைதளப் பக்கத்தில் ஹேஷ்டேக் கெட் அவுட் ஸ்டாலினை (#GetOutStalin) பதிவு செய்தார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.

#GetOutStalin என்ற ஹேஷ்டேகை பதிவு செய்து அவர் பகிர்ந்த ட்வீட்டில், “ஒரே குடும்பத்தின் ஆதிக்கம், கரைபடிந்த அமைச்சரவை, ஊழலின் மையம், சட்டம் ஒழுங்கு சீர்கேட்டைக் கண்டுகொள்ளாமல் இருப்பது, தமிழகத்தை போதைப் பொருள் மற்றும் கள்ளச் சாராயத்தின் புகலிடமாக மாற்றியது, கடனாளி மாநிலமாக்கியது, சிதிலமடைந்த கல்வித் துறை, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பில்லாத சமூகம், சாதி மதத்தை வைத்து பிரிவினைவாத அரசியல் செய்வது, மக்களுக்கு நல்லாட்சி வழங்கத் தவறியது, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாதது என்றிருக்கும் திமுக அரசை மக்கள் விரைவில் அப்புறப்படுத்துவார்கள்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

அண்ணாமலை விடுத்த சவால்: முன்னதாக நேற்று (வியாழக்கிழமை) சேலத்​தில் திருமண நிகழ்ச்​சி​யில் பங்கேற்க வந்திருந்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தி​யாளர்​களை சந்தித்தார். அப்போது அவர், “வரும் 26-ம் தேதிக்​குப் பின்னர் தமிழகத்​தில் இருப்​பேன். அப்போது, துணை முதல்வர் உதயநிதி கேட்​டபடி சென்னை அண்ணா சாலைக்கு தனி ஆளாக வருகிறேன். எந்த இடத்​துக்கு, என்ன நேரத்​தில் வர வேண்​டும் என்று குறிப்​பிட்டுச் சொல்​லுங்​கள்.

திமுக ஐ.டி. விங் மற்றும் அரசு இயந்​திரங்​களைப் பயன்​படுத்தி, எக்ஸ் தளத்​தில் ‘கெட்​-அவுட் மோடி’ என்று டிரென்​டிங் செய்​துள்ளனர். ஸ்டா​லின் தமிழகத்தை விட்டு வெளியேற வேண்​டும் என ‘கெட்​-அவுட் ஸ்டா​லின்’ என எக்ஸ் தளத்​தில் பதிவிடப்​போகிறோம். யார் அதிகமாக டிரென்​டிங் செய்​தனர் என்ப​தைப் பார்த்து​விடு​வோம்.” என சவால் விடுத்திருந்தார்.

இந்நிலையில், ஏற்கெனவே அறிவித்தபடி இன்று காலை சரியாக 6 மணிக்கு தனது எக்ஸ் சமூகவலைதளப் பக்கத்தில் ஹேஷ்டேக் கெட் அவுட் ஸ்டாலினை (#GetOutStalin) அவர் பதிவு செய்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in