Published : 21 Feb 2025 05:30 AM
Last Updated : 21 Feb 2025 05:30 AM

பொதுமக்களுக்கு இடையூறாக போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கில் விசிக எம்எல்ஏ பாலாஜி விடுதலை

சென்னை: பொது​மக்​களுக்கு இடையூறு ஏற்படுத்​தும் வகையில் போராட்​டத்​தில் ஈடுபட்​டதாக பதியப்​பட்ட வழக்​கில், எம்எல்ஏ எஸ்.எஸ்​.பாலாஜி உள்ளிட்​டோர் விடுதலை செய்​யப்​பட்​டனர். வன்கொடுமை தடுப்பு சட்டத்​தில் உச்ச நீதி​மன்றம் கொண்டு வந்த திருத்தம் பட்டியலின மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்து​வ​தால், அதை மத்திய அரசு அமல்​படுத்​தக்​கூடாது என வலியுறுத்தி கடந்த 2018-ம் ஆண்டு வடமாநிலங்​களில் பட்டியலின அமைப்​பினர் போராட்டம் நடத்​தினர்.

இதில் இறந்து போன குடும்பத்​தினருக்கு மத்திய அரசு தலா ரூ.1 கோடி வழங்க வேண்​டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அவ்வாண்டு ஏப்.

3-ம் தேதி சென்னை, அண்ணா சாலை​யில் விசிக துணை பொதுச்​செய​லாளர் எஸ்.எஸ்​. பாலாஜி தலைமை​யில் விசிக​வினர் ஆர்ப்​பாட்டம் நடத்​தினர். அனும​தி​யின்றி போராட்​டத்​தில் ஈடுபட்டு பொது​மக்​களுக்கு இடையூறு ஏற்படுத்​தி​யதாக பாலாஜி உட்பட 6 பேர் மீது போலீ​ஸார் வழக்​குப்​ப​திவு செய்​தனர்.

இவ்வழக்​கு​ சென்னை ஆட்சியர் அலுவலக வளாகத்​தில் செயல்​படும் எம்.பி, எம்எல்​ஏக்கள் மீதான குற்ற வழக்​குகளை விசா​ரிக்​கும் சிறப்பு நீதி​மன்​றத்​தில் நடந்து வந்தது. அனைத்து தரப்பு வாதங்​களை​யும் கேட்ட நீதிபதி ஜெயவேல், எஸ்.எஸ்​. பாலாஜி உள்ளிட்ட 6 பேர் மீதான குற்​றச்சாட்டு சந்​தேகத்​துக்கு இட​மின்றி நிரூபிக்​கப்​பட​வில்லை எனக்​கூறி அவர்களை ​விடுதலை செய்​​தார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x