Published : 17 Feb 2025 06:17 AM
Last Updated : 17 Feb 2025 06:17 AM

திவ்யா சத்யராஜுக்கு திமுகவில் முக்கிய பொறுப்பு

சென்னை: ​தி​முக​வில் இணைந்த திவ்யா சத்யராஜுக்கு தகவல் தொழில்​நுட்ப அணி துணைச் செயலாளர் பொறுப்பு தரப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக திமுக பொதுச்​செய​லாளர் துரை​முருகன் வெளி​யிட்ட அறிவிப்பு: திமுக சிறு​பான்மை நல உரிமைப் பிரிவு தலைவராக டி.பி.எம்​.மைதீன்​கான், சிறு​பான்மை பிரிவு துணைச் செயலா​ளராக பொறுப்பு வகித்து வரும் வி.ஜோசப்​ராஜ் சிறுபான்மை நல உரிமைப் பிரிவு துணைத் தலைவ​ராக​வும், சிறு​பான்மை நல உரிமை பிரிவு துணைச் செயலா​ளராக கே.அன்வர் அலி ஆகியோர் நியமிக்​கப்​படு​கின்​றனர்.

கோவை செல்​வ​ராஜ் மறைந்​த​தால், திமுக செய்தித் தொடர்பு துணைச் செயலா​ளராக சூர்யா கிருஷ்ண​மூர்த்தி நியமிக்​கப்​பட்​டுள்​ளார். திமுக தகவல் தொழில்​நுட்ப அணி துணைச் செயலா​ளராக நியமிக்​கப்​பட்ட தமிழ் பொன்னிக்கு பதிலாக திவ்யா சத்யராஜ் நியமிக்​கப்​படு​கிறார் என தெரிவித்துள்ளார். திவ்யா சத்யராஜ் கடந்த மாதம் திமுகவில் இணைந்தது குறிப்​பிடத்​தக்​கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x