Published : 15 Feb 2025 11:16 AM
Last Updated : 15 Feb 2025 11:16 AM

‘தமிழகத்தில் சாதிய வன்கொடுமைகள் நடப்பதையாவது ஒப்புக்கொள்வீரா?’ - முதல்வருக்கு பா.ரஞ்சித் கேள்வி

சென்னை: “தமிழ்நாட்டில் மிகக் கொடுமையான சாதியரீதியிலான வன்கொடுமைகள் தங்கு தடையின்றி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இதை தடுக்க அல்லது குறைந்தப்பட்சம் இப்படி நடந்துகொண்டு இருக்கிறது என்பதையாவது ஒப்புக்கொள்வீரா?” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு இயக்குநர் பா.ரஞ்சித் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “தமிழ்நாட்டில் மிகக் கொடுமையான சாதியரீதியிலான வன்கொடுமைகள் தங்கு தடையின்றி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. கடந்த சில தினங்களில் மட்டும் பல வன்முறை சம்பவங்கள் தலித் மக்களின் மீது நிகழ்த்தப் பட்டிருக்கிறது. இதை தடுக்க அல்லது குறைந்தப்பட்சம் இப்படி நடந்துகொண்டு இருக்கிறது என்பதையாவது ஒப்புக்கொள்வீரா??? முதல்வர் ஸ்டாலின்!!

தங்கள் அமைச்சரவையின் கீழ் இயங்கும், ஆதி திராவிட துறைகளுக்கும், தனித்தொகுதி MLA, MP-களுக்கும் இதை விட வேறு முக்கியமான பணிகள் இருப்பதால் நாங்கள் வேண்டுமானால், சமீப காலங்களில் தலித்துகள் மீது நிகழ்த்தப்பட்ட வன்கொடுமைகள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்கிறோம். நன்றி!” எனக் காட்டமாகப் பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, ‘உங்களில் ஒருவன்’ நிகழ்ச்சியின் வாயிலாக மக்களின் கேள்விகளுக்கு முதல்வர் ஸ்டாலின் பதில் அளித்திருந்தார். அதில் அரசியல் சார்ந்தும், கூட்டணிக் கட்சி விவகாரங்கள் தொடர்பாகவும், தமிழகத்தில் நடைபெறும் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் தொடர்பாகவும், மணிப்பூர் குடியரசுத் தலைவர் ஆட்சி குறித்து மக்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கும் முதல்வர் பதில் அளித்திருந்தார். அதனை தனது சமுகவலைதளங்களிலும் பகிர்ந்திருந்தார்.

முதல்வரின் அந்தப் பதிவுக்கு பதிலளித்துள்ள இயகுநர் பா.ரஞ்சித், ”தமிழ்நாட்டில் மிகக் கொடுமையான சாதியரீதியிலான வன்கொடுமைகள் தங்கு தடையின்றி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இதை தடுக்க அல்லது குறைந்தப்பட்சம் இப்படி நடந்துகொண்டு இருக்கிறது என்பதையாவது ஒப்புகொள்வீரா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x