Published : 12 Feb 2025 06:07 AM
Last Updated : 12 Feb 2025 06:07 AM
சென்னை: சென்னையில் தனியார் மூலம் இயக்கும் வகையில் 600 மின்சார தாழ்தள பேருந்துகளைக் கொள்முதல் செய்வதற்கான டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது.
மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் வெளியிட்ட டெண்டர் அறிவிப்பில் கூறியிருப்பதாவது: மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் 600 தாழ்தள மின்சாரப் பேருந்துகள் கொள்முதல் செய்யப்படவுள்ளன. இதனை தயாரித்து வழங்குவதோடு, பராமரித்து இயக்க கூட்டு ஒப்பந்த அடிப்படையில் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்படுகிறது. இதற்கு விருப்பமுள்ள நிறுவனங்கள் இணையவழியில் ஏப்.3-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
அதன்படி, 400 ஏசி பேருந்துகளும், 200 குளிர்சாதன வசதியில்லா பேருந்துகளும் தயாரித்து வழங்க வேண்டும். இதில் நடத்துநர்கள் மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் நியமிக்கப்படுவர். இதர பணிகளை டெண்டரில் தேர்வாகும் நிறுவனம் கவனித்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT