Published : 11 Feb 2025 06:43 PM
Last Updated : 11 Feb 2025 06:43 PM

சென்னை ஐகோர்ட், மதுரை கிளையில் தமிழக அரசு தரப்பில் ஆஜராகி வாதிட 39 வழக்கறிஞர்கள் நியமனம்

சென்னை: சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசு தரப்பில் ஆஜராகி வாதிட 39 வழக்கறிஞர்களை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் சிறப்பு அரசு ப்ளீடர்களாக இ.வேத பகத்சிங், ஏ.என்.புருஷோத்தம், எஸ்.செந்தில்முருகன், யு.பரணிதரன், சி. ஹர்ஷராஜ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். கே. அஷ்வினிதேவி, ஆர். சித்தார்த், டி.கே.சரவணன், எஸ்.இந்துபாலா, ஆகியோர் கூடுதல் அரசு ப்ளீடர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

சி.பாஸ்கரன், எஸ்.உதயக்குமார், ஆர்.வெங்கடேச பெருமாள் ஆகியோர் குற்றவியல் அரசு வழக்கறிஞர்களாகவும், வி.உமாகாந்த், பி.கருணாநிதி, வி.வெங்கட சேஷய்யா, சி,.கவுதமராஜ், ஏ.பாக்கியலட்சுமி, ஆர்.சசிக்குமார், இ.பி.சென்னியங்கிரி, பி.ஐஸ்வர்யா, வி.வீரமணி, ஜி.பிரசன்னா ஆகியோர் உரிமையியல் அரசு வழக்கறிஞர்களாகவும், பி.செல்வி வரி வழக்குகளுக்கான அரசு வழக்கறிஞராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதேபோல உயர் நீதிமன்ற மதுரை கிளையில், எப்.தீபக், எம்.லிங்கதுரை, சி.வெங்கடேஷ்குமார் ஆகியோர் சிறப்பு அரசு ப்ளீடர்களாகவும், எஸ்.மாதவன், கே.மாலதி, பி.ராமநாதன் ஆகியோர் கூடுதல் அரசு ப்ளீடர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். கே.குணசேகரன், எஸ்.எஸ்.மனோஜ், எம்.கருணாநிதி, எஸ்.பிரகாஷ் ஆகியோர் குற்றவியல் அரசு வழக்கறிஞர்களாகவும், எஸ். ஜெயப்பிரியா, எஸ்.வினோத், எம்.கங்காதரன், பி.பி.அகமது யாஸ்மின் பர்வீன், ஏ.ஒளிராஜா, கே.ஆர்.பதுரஸ் ஜமான் ஆகியோர் உரிமையியல் அரசு வழக்கறிஞர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதில் ஏற்கெனவே கூடுதல் அரசு வழக்கறிஞர்களாக பணியாற்றியவர்களுக்கு தற்போது சிறப்பு அரசு ப்ளீடர்களாகவும், அரசு வழக்கறிஞர்களாக பணியாற்றியவர்களுக்கு கூடுதல் அரசு ப்ளீடர்களாகவும் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x