தமிழக மீனவர் படகை ஏலம் விட்ட இலங்கை நீதிமன்றம்

பருத்தித்துறை நீதிமன்ற வளாகத்தில் ஏலம் விடப்பட்ட தமிழக மீனவரின் படகு
பருத்தித்துறை நீதிமன்ற வளாகத்தில் ஏலம் விடப்பட்ட தமிழக மீனவரின் படகு
Updated on
1 min read

ராமேசுவரம்: இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட தமிழக படகு ஒன்று அந்நாட்டு நீதிமன்றத்தினால் ஏலம் விடப்பட்டது.

27.12.2022ல் நாகை மாவட்டம் கோடியக்கரை மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடலுக்குச் சென்ற பைபர் படகில் 4 மீனவர்கள் யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை கடற்பகுதியில் அந்நாட்டு மீனவர்களால் சிறைப்பிடிக்கப்பட்டனர்.

வல்வெட்டுத்துறை காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, பருத்தித்துறை நீதிமன்றம் 4 மீனவர்களை மட்டும் விடுதலை செய்து பைபர் படகையும் அதிலிருந்த உபகரணங்களையும் நாட்டுடமையாக்கியது.

இந்நிலையில், நாட்டுடமையாக்கப்பட்ட இந்த படகு, மோட்டார், வலைகள், நங்கூரம், குளிர்சாதனப் பெட்டி, ஜிபிஎஸ் கருவி ஆகியன பருத்தித்துறை நீதிமன்ற வளாகத்தில் ஏலமிடப்பட்டது.

இவை தனித்தனியாக மொத்தம் இலங்கை மதிப்பில் 5 லட்சத்து 60 ஆயிரத்து 100 ரூபாய்க்கு (இந்திய மதிப்பில் ரூ.1.65 ஆயிரம்) பகிரங்க ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in