Published : 08 Feb 2025 07:33 AM
Last Updated : 08 Feb 2025 07:33 AM

தாம்பரம்-நாகர்கோவில், கொச்சுவேலி சிறப்பு ரயில் சேவைகள் 3 மாதத்துக்கு ரத்து

நடைமுறை காரணங்களுக்காக தாம்பரம்-நாகர்கோவில், கொச்சுவேலி சிறப்பு ரயில்கள் சேவை 3 மாதங்களுக்கு ரத்து செய்யப்படுவதாக, தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதன்படி, நாகர்கோவில்-தாம்பரம் அதிவிரைவு ரயில் (வண்டி எண்.06012) வரும் ஏப்.13, 20, 27, மே 4, 11, 18, 25 மற்றும் ஜுன் 1, 8, 15, 22, 29-ம் தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது.

மறுமார்க்கத்தில், தாம்பரம்-நாகர்கோவில் இடையே இயக்கப்படும் அதிவிரைவு சிறப்பு ரயில் (06011) வரும் ஏப்.14, 21, 28, மே 5, 12, 19, 26 மற்றும் ஜுன் 2, 9, 16, 23, 30 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது.

இதேபோல், தாம்பரம்-கொச்சுவேலி ஏசி சிறப்பு ரயில் (06035) வரும் ஏப்.11, 18, 25, மே 2, 9, 16, 23, 30 மற்றும் ஜுன் 6, 13, 20, 27 ஆகிய தேதிகளிலும், மறுமார்க்கத்தில், கொச்சுவேலி-தாம்பரம் இடையே (06036) வரும் ஏப்.13, 20, 27, மே 4, 11, 18, 25 மற்றும் ஜுன் 1, 8, 15, 22, 29 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது.

மெமூ ரயில்கள் ரத்து: ரயில் பாதை மேம்பாட்டு பணி காரணமாக, சென்னை கடற்கரை – திருவண்ணாமலை உட்பட ஆறு ரயில்களின் சேவை ரத்து செய்யப்படுகிறது.

இதன்படி, சென்னை கடற்கரை – திருவண்ணாமலை இடையே மாலை 6 மணிக்கு இயக்கப்படும் மெமூ ரயில் (வண்டி எண்.66033) வரும் 10, 12, 14-ம் தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது. இதேபோல், திருவண்ணாமலை – தாம்பரம் இடையே அதிகாலை 4.30 மணிக்கு இயக்கப்படும் மெமூ ரயில் (66034) ரயில் வரும் 11, 13, 15-ம் தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது. காட்பாடி – திருப்பதி இடையே இரவு 9.10 மணிக்கு இயக்கப்படும் மெமூ ரயில் (67210), திருப்பதி – காட்பாடி இடையே இரவு 7.10 மணிக்கு இயக்கப்படும் மெமூ (67209) ரயில்கள் வரும் 10, 12, 14ம் தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது. மேலும், காட்பாடி – ஜோலார்பேட்டை இடையே காலை 9.30 மணிக்கு இயக்கப்படும் மெமூ ரயில் (06417), ஜோலார்பேட்டை – காட்பாடி இடையே நண்பகல் 12.45 மணிக்கு இயக்கப்படும் மெமூ (06418) ரயில்கள் வரும் 10, 12, 14ம் தேதிகளில் ரத்து செய்யப்படும்.

ஒரு பகுதி ரத்து: அரக்கோணம் – காட்பாடி இடையே இரவு 9 மணிக்கு இயக்கப்படும் மெமூ ரயில் (66057) வரும் 10, 12, 14-ம் தேதிகளில் சேவூர் வரை மட்டுமே இயக்கப்படும்.

இதேபோல், விழுப்புரம் – காட்பாடி இடையே இரவு 7.10 மணிக்கு இயக்கப்படும் மெமூ ரயில் (66026) வரும் 10, 12, 14-ம் தேதிகளில் வேலுார் கன்டோன்மெண்ட் வரை மட்டுமே இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x