சிலை கடத்தல்: பொன் மாணிக்கவேல் தொடர்ந்த வழக்கில் சிபிஐ பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

சிலை கடத்தல்: பொன் மாணிக்கவேல் தொடர்ந்த வழக்கில் சிபிஐ பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
Updated on
1 min read

மதுரை: சிலை கடத்தல் வழக்​கின் முதல்​கட்ட விசாரணை அறிக்கை நகல் கேட்டு ஓய்வு​பெற்ற ஐ.ஜி. பொன் மாணிக்க​வேல் தாக்கல் செய்த மனுவுக்கு, சிபிஐ பதில் அளிக்​கு​மாறு உயர் நீதி​மன்றம் உத்தர​விட்​டது.

தமிழக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஓய்வு​பெற்ற டிஎஸ்பி காதர்​பாட்ஷா, “சிலை கடத்தல் வழக்​கின் முக்​கியக் குற்​றவாளி தீனத​யாளனை தப்பவைக்க ஓய்வு​பெற்ற ஐ.ஜி. பொன் மாணிக்க​வேல் முயன்​றார். இதற்கு இடையூறாக இருந்த என் மீது வழக்கு பதிவு செய்​தார். இது தொடர்பாக பொன்​.​மாணிக்க​வேல் மீது புகார் அளித்​தேன். இந்தப் புகாரின் மீது வழக்கு பதிவு செய்து விசா​ரிக்கஉத்தரவிட வேண்​டும்” என்று கோரி, உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் மனு தாக்கல் செய்​தார்.

இதை விசா​ரித்து, பொன் மாணிக்க​வேல் மீதான புகார் குறித்து சிபிஐ விசாரணை நடத்தி, அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதி உத்தர​விட்​டார். இதையடுத்து, சிபிஐ முதல்​கட்ட விசாரணை நடத்தி, பொன் மாணிக்க​வேல் மீது வழக்கு பதிவு செய்​தது. இந்நிலை​யில், தன் மீதான வழக்​கில் மதுரை மாவட்ட நீதி​மன்​றத்​தில் 2024 ஆகஸ்ட் மாதம் சிபிஐ தாக்கல் செய்த முதல்​கட்ட விசாரணை அறிக்கை​யின் நகல் கேட்டு, விசாரணை நீதி​மன்​றத்​தில் பொன் மாணிக்க​வேல் மனு தாக்கல் செய்​தார்.

இந்த மனுவை விசா​ரித்த நீதி​மன்​றம், முதல் தகவல் அறிக்கை​யைத் தவிர்த்து பிற ஆவணங்களை வழங்க முடி​யாது என்று உத்தர​விட்​டது. இதை ரத்து செய்து, சிபிஐ முதல்​கட்ட விசாரணை அறிக்கை​யின் நகல் வழங்க உத்தர​விடக் கோரி பொன் மாணிக்க​வேல் உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் மனு தாக்கல் செய்​தார்.

இந்த மனு நீதிபதி பி.பு​கழேந்தி முன்னிலை​யில் விசா​ரணைக்கு வந்தது. சிபிஐ தரப்​பில், “விசாரணை அதிகாரியைத் தொடர்​பு​கொள்ள இயலவில்லை. இதனால் 4 வார காலம்அவகாசம் வழங்க வேண்​டும்” எனக் கூறப்​பட்​டது.

பின்னர் நீதிபதி, ” உயர் நீதி​மன்ற மதுரை அமர்வு தொடங்​கப்​பட்​டதன் நோக்​கமே, வழக்​கு​களுக்கு விரைவாக தீர்வு காணப்பட வேண்​டும் என்பதே. தற்போது மின்னஞ்​சல், வாட்​ஸ்அப் என தொலைத்​தொடர்பு சாதனங்​களின் பங்கு அதிகரித்​துள்ள சூழலில், விசாரணை அதிகாரியைத் தொடர்பு கொள்ள இயலவில்லை என்று கூறி ​காலஅவ​காசம் கோருவதை ஏற்க இய​லாது. இது தொடர்பாக சிபிஐ ப​தில் அளிக்க வேண்​டும். ​விசாரணை பிப். 24-ம் தேதிக்கு தள்ளி வைக்​கப்​படு​கிறது” என்று உத்​தர​விட்​டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in