ஞானசேகரனிடம் நாளை குரல் மாதிரி பரிசோதனை நடத்த அனுமதி

ஞானசேகரனிடம் நாளை குரல் மாதிரி பரிசோதனை நடத்த அனுமதி
Updated on
1 min read

சென்னை: ஞானசேகரனிடம் நாளை குரல் மாதிரி பரிசோதனை நடத்த அனுமதித்து சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டார்.

அவருக்கு 7-ம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கைது செய்யப்பட்ட ஞானசேகரன் செல்போனில் பேசிய ஆடியோ ஆதாரங்களை, உறுதி செய்ய ஆய்வகத்தில் குரல் பரிசோதனை செய்வதற்கு சிறப்பு புலனாய்வு பிரிவு போலீஸார் முடிவு செய்துள்ளனர்.

இதையடுத்து ஞானசேகரனிடம் குரல் பரிசோதனை செய்ய அனுமதி கோரி சிறப்பு புலனாய்வு குழு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி சுப்பிரமணியன், நாளை (பிப்.6) ஞானசேகரனுக்கு குரல் பரிசோதனை நடத்த அனுமதித்து உத்தரவிட்டுள்ளார். அதன்படி, ஞானசேகரனை புழல் சிறையில் இருந்து தடயவியல் அலுவலகத்துக்கு அழைத்து வந்து குரல் மாதிரி பரிசோதனை மேற்கொள்ளப்பட இருக்கிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in