பொற்பனைக்கோட்டை அகழாய்வில் சிறிய அளவு தங்கம், எலும்புமுனை கருவி கண்டெடுப்பு

பொற்பனைக்கோட்டை அகழாய்வில் சிறிய அளவு தங்கம், எலும்புமுனை கருவி கண்டெடுப்பு
Updated on
1 min read

பொற்பனைக்கோட்டையில் நடைபெற்று வரும் அகழாய்வில் உடைந்த நிலையில் தங்கத்தின் சிறு பகுதியும், எலும்புமுனைக் கருவியும் நேற்று கண்டெடுக்கப்பட்டன.

புதுக்கோட்டை மாவட்டம் பொற்பனைக்கோட்டையில் தமிழக தொல்லியல் துறை சார்பில், இயக்குநர் தங்கதுரை தலைமையில் அகழாய்வுப் பணி நடைபெற்று வருகிறது. முதற்கட்ட அகழாய்வு முடிவடைந்த நிலையில், கடந்த ஆண்டு ஜூன் 18-ம் தேதி முதல் 2-ம் கட்ட அகழாய்வு நடைபெற்று வருகிறது.

வடகிழக்குப் பருவமழையால் அகழாய்வு நிறுத்தப்பட்டிருந்த நிலையில், ஜன. 20-ம் தேதி முதல் 7 இடங்களில் மீண்டும் அகழாய்வுப் பணி நடைபெற்று வருகிறது. அதில், ஒரு குழியில் 196 செ.மீ. ஆழத்தில் எலும்புமுனைக் கருவி கண்டெடுக்கப்பட்டது. அந்தக் கருவி 7.8 கிராம் எடையில், 7.4 செ.மீ. நீளம், 1 செ.மீ. விட்டம் கொண்டுள்ளது. மற்றொரு குழியில் உடைந்த நிலையில் தங்கத்தின் சிறு பகுதி கண்டெடுக்கப்பட்டுள்ளது. 2-ம் கட்ட அகழாய்வில் இதுவரை கண்ணாடி மணிகள், வளையல்கள், இரும்பு ஆணி, குளவிக்கல், சூதுபவள மணி உள்ளிட்ட 1,743 தொல்பொருட்கள் கிடைத்துள்ளதாக அகழாய்வுத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in