Published : 21 Jul 2018 08:39 AM
Last Updated : 21 Jul 2018 08:39 AM

பட்டுக்கோட்டை அருகே போலீஸார் அழைத்து சென்ற அமமுக பிரமுகர் மர்ம மரணம்

மதுக்கூர் போலீஸாரால் விசார ணைக்காக அழைத்துச் செல்லப் பட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பிரமுகர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார். அவரது உடலை வாங்க உற வினர்கள் மறுத்ததால், பரபரப்பு ஏற்பட்டது.

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக் கோட்டை அருகே உள்ள பழவேரிக் காடு முன்னாள் ஊராட்சித் தலை வர் குமாரசெல்வம். இவர், தற்போது அமமுகவின் மாநிலப் பொதுக்குழு உறுப்பினராக இருந்து வந்தார்.

இந்நிலையில், கடந்த 17-ம் தேதி காலை குமாரசெல்வம் வீட் டுக்குச் சென்ற மதுக்கூர் போலீ ஸார், ஒரு வழக்கு தொடர்பான விசாரணைக்காக அவரை காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றுள் ளனர். தகவலறிந்த உறவினர்கள் மதுக்கூர் காவல் நிலையத்துக்குச் சென்று விசாரித்தபோது, போலீ ஸார் சரியான பதில் கூறவில் லையாம். இதையடுத்து, பட்டுக் கோட்டை உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் குமாரசெல் வத்தை அவரது உறவினர்கள் தேடியுள்ளனர்.

இந்நிலையில், மாரடைப்பு ஏற் பட்டதாகக் கூறி, தஞ்சாவூர் மருத் துவக் கல்லூரி மருத்துவமனையில் போலீஸாரால் அனுமதிக்கப்பட்ட குமாரசெல்வம் நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவலறிந்த குமாரசெல்வத்தின் உறவினர் கள், அமமுகவினர் நூற்றுக்கணக் கானோர் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்ட தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, அங்கு போலீஸார் குவிக்கப்பட்டனர்.

குமாரசெல்வத்தின் உடலை வாங்க மறுத்த உறவினர்கள் மற்றும் அமமுக கட்சியினர், “கடந்த 17-ந் தேதி கைது செய்யப்பட்ட குமாரசெல்வத்தை காவல் நிலையத்தில் வைத்து போலீஸார் தாக்கியதால், மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. அவரைத் தாக்கிய போலீஸாரே மருத்துவமனையில் சேர்த்துவிட்டு, தலைமறைவாகிவிட்டனர். அரசியல் காழ்ப்புணர்ச்சியால் அதிமுக பிரமுகர் ஒருவரின் தூண்டுதலின் பேரில், போலீஸார் பொய் வழக்கு பதிவு செய்து, குமாரசெல்வத்தை கைது செய்து, தாக்கியுள்ளனர். அதனாலேயே அவர் உயிரிழந்துள்ளார். இதற்குக் காரணமான மதுக்கூர் காவல் நிலைய ஆய்வாளர், உதவி ஆய்வாளர், காவலர்கள் மற்றும் துரை.செந்தில் ஆகியோர் மீது கொலை வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்ய வேண்டும்” என வலியுறுத்தி போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதே புகாரை, தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரி டமும் அளித்து இதுகுறித்த விசாரணை முடியும் வரை குற்றம் சாட்டப்பட்ட போலீஸாரை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். தொடர்ந்து, மதுக்கூரிலும் பதற்றம் ஏற்பட்டதால், அங்கும் ஏராளமான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக டிடிவி.தினகரன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “குமாரசெல்வம் மீது பொய் வழக்கு புனைந்து கடந்த 17-ம் தேதி அதிகாலை காவல்துறையினர் அவரை கைது செய்துள்ளனர். காவல்துறை வாக னத்தில் ஏற்றப்படும்போது தனக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதை அவர் தெரிவித்தும், காவல்துறை யினர் செவிசாய்க்கவில்லை. வாகனத்தில் அவர் மயங்கி விழுந்தபின், மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நேற்று உயிரிழந்தார். அவரது மரணத்துக்கு இந்த அரசும், காவல்துறையுமே முழு காரணம். குமாரசெல்வத்தை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துக் கொள் கிறேன்” என கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x