சென்னை - பாரதியார் நினைவு இல்லம் எதிரே கழிவுநீர் குழாய் உடைந்து துர்நாற்றம், சுகாதார சீர்கேடு

சென்னை - பாரதியார் நினைவு இல்லம் எதிரே கழிவுநீர் குழாய் உடைந்து துர்நாற்றம், சுகாதார சீர்கேடு
Updated on
1 min read

திருவல்​லிக்​கேணி துளசிங்​க பெரு​மாள்​ கோ​யில்​ தெரு​வில்​ பார​தி​யார்​ நினை​வு இல்​லம்​ எ​திரே கழி​வுநீர்​ குழாய்​ உடைந்​த​தால்​ அந்த வழியே பார்த்​தசா​ர​தி கோ​யிலுக்​கு செல்​வோரு​ம்​, அப்​பகு​தி​யில்​ வசிப்​போரு​ம்​ பெரு​ம்​ சிரமத்​துக்​கு ஆளாகி ​உள்​ளனர்​. ​திருவல்​லிக்​கேணி துளசிங்​க பெரு​மாள்​ கோ​யில்​ தெரு​வில்​ கழி​வுநீர்​ செல்​வ​தில்​ தடை ஏற்​பட்​டது. இது குறித்​து அப்​பகு​தி மக்​கள்​ சென்னை​ குடிநீர்​ வாரி​யத்​திடம் பு​கார்​ அளித்​தனர்​.

குடிநீர்​ வாரிய அதிகாரி​கள்​ அந்​த​ பகு​தி​யை ஆய்​வு செய்​த​போது அங்​குள்​ள பார​தி​யார்​ நினை​வு இல்​லம்​ எ​திரே சாலை​யில்​ 8 அடி ஆழத்​தில்​ செல்​லும்​ கழி​வுநீர்​ குழாய்​ உடைந்​திருப்​பது தெரிய​வந்​தது. பொக்​லைன்​ தோண்​டி பார்த்த​போது 6 அடி நீளத்​துக்​கு கழி​வுநீர்​ குழாய்​ உடைந்​து, கழி​வுநீர்​ வெளி​யேறு​வது கண்​டறிப்​பட்​டது.

இதனிடையே, கழி​வுநீர்​ ​மாற்றுப்​ பாதை​யில்​ வெளி​யேறு​வதற்​கு ஏற்​பாடு செய்​து​, குழா​யில்​ ஏற்​பட்​ட உடைப்​பை சரிசெய்​யும்​ பணி தொடங்​கி நடை​பெற்று வரு​கிறது. இது​குறித்​து அப்​பகு​தி மக்​கள்​ கூறுகை​யில்​, “கழி​வுநீர்​ வெளி​யேறி துர்​நாற்​ற​மும்​ சு​கா​தா​ர சீர்கேடும்​ ஏற்​படு​வ​தால்​ பெரிது​ம்​ சிரம​மாக உள்​ளது. எனவே, கழி​வுநீர்​ குழாய்​ உடைப்​பை சரிசெய்​யும்​ பணி​யை துரிதப்​படுத்​த வேண்​டும்​” என்​று கேட்டுக்​ கொண்​டுள்​ளனர்​.

இதுதொடர்​பாக சென்னை​ குடிநீர்​ வாரிய அதிகாரி​கள்​ கூறுகை​யில்​, “கழி​வுநீர்​ தேங்​கி வெளி​யேறியது தொடர்​பாக சில வாரங்​களுக்​கு ​முன்​பே தெரிவிக்​கப்​பட்​டது. வை​குண்​ட ஏ​காதசி ​விழா நடை​பெற்​ற​தால்​ உடனடி​யாக சீரமைப்புபணி​யை மேற்​கொள்​ள ​முடிய​வில்​லை. அப்​பகு​தி​யைச்​ சேர்ந்​தவர்​களு​ம்​ ​விழா ​முடிந்​த​ பிறகே கழி​வுநீர்​ பிரச்​சினைக்​கு தீர்​வு ​காணும்​படி கேட்டுக்​ கொண்டனர்​. அதன்​படி, பார​தி​யார்​ நினைவு இல்​லம் எ​திரே கழி​வுநீர் குழாயில்​ ஏற்​பட்​டுள்​ள சேதத்​தை சரி செய்​யும்​ பணி வேகமாக நடை​பெற்று வரு​கிறது. வரு​ம்​ புதன்​கிழமைக்​குள்​ இப்​பணி ​முடிவடை​யும்​” என்று தெரி​வித்​தனர்​.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in