13 மணல் குவாரிகளை திறக்க அனுமதிக்க மாட்டோம்: டி.ஜெயக்குமார் உறுதி

13 மணல் குவாரிகளை திறக்க அனுமதிக்க மாட்டோம்: டி.ஜெயக்குமார் உறுதி
Updated on
1 min read

சென்னை: தமிழக அரசு 13 மணல் குவாரிகளை திறக்க அனும​திக்​க​மாட்​டோம் என்று முன்​னாள் அமைச்சர் டி.ஜெயக்​கு​மார் தெரி​வித்​துள்ளார். அதிமுக பொதுச்​செய​லாளர் பழனிசாமி, சென்னை, புறநகர் மாவட்​டங்​களில் நடைபெற உள்ள களஆய்வு பணிகள் குறித்து, மாவட்ட செயலா​ளர்களுடன் சென்னையில் நேற்று ஆலோசனை நடத்தினார்.

பின்னர் அவர் கூறிய​தாவது: தமிழகத்​தில் தற்போது 13 மணல் குவாரிகள் திறக்க அரசு முடிவு செய்துள்ளது. இதன்​மூலம் தமிழகத்தை பாலை​வன​மாக்​கும் முயற்சி நடை​பெற்று வருகிறது. குவாரி மூலம் ஆதாயம் பெற வேண்​டும், ஊழல் செய்ய வேண்​டும், கொள்​ளை​யடிக்க வேண்​டும் என்பதே திமுக அரசின் நோக்​கமாக உள்ளது.

மணல் குவாரிகளை திறக்கவிட மாட்டோம். மீறி திறந்தால், மக்களை திரட்டி போராட்டம் நடத்து​வோம். நாட்​டில் விலை​வாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்​கேடு, பாலியல் வன்கொடுமை விவகாரம் இப்படி எத்தனையோ பிரச்சி னைகள் உள்ளன. அதை பற்றி பேசாமல் பெரி​யார் குறித்து சீமான் பேசுவது மக்களை திசை திருப்பும் செயல்.

கிழக்கு கடற்கரை சாலை விவகாரத்​தில் உண்​மையான குற்​றவாளிகளை கைது செய்து கடுமையான தண்டனை பெற்றுத்தர வேண்​டும். இவ்​வாறு அவர் கூறினார்​. மாவட்ட செயலாளர்களை தனித்தனியே அழைத்து விவாதித்த பழனிசாமி, தொகுதிகளில் அதிமுகவின் பலம் மற்றும் பலவீனம் குறித்து கேட்டறிந்தார். அப்போது “கட்சியில் இளைஞர்கள் அதிக அளவில் சேர்த்தால் தான் கட்சி வளரும். அதே நேரத்தில், அவர்களின் குற்றப் பின்னணி குறித்து ஆராய்ந்த பின்னரே கட்சியில் சேர்க்க வேண்டும்” என்று அறிவுறுத்தியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in