9 ஆட்சியர்கள் உட்பட 36 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்

9 ஆட்சியர்கள் உட்பட 36 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்

Published on

சென்னை: வேளாண் துறை செயலராக இருந்த அபூர்வா ஓய்வு பெற்றதையடுத்து புதிய செயலராக வி.தட்சிணாமூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழகம் முழுவதும் 9 மாவட்ட ஆட்சியர்கள் உட்பட 36 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை தலைமைச் செயலர் நா.முருகானந்தம் வெளியிட்டுள்ளார். கீழே மாற்றப்பட்ட அதிகாரிகளின் பட்டியல் விவரம் அட்டவணையாக தரப்பட்டுள்ளது.

கூடுதல் பொறுப்பு: துணை முதல்வரின் செயலராக உள்ள பிரதீப் யாதவ், சிறப்பு திட்ட செயலாக்கத் துறை செயலர் பொறுப்பையும், துணை முதல்வரின் கூடுதல் செயலராக உள்ள எம்.ஆர்த்தி, தமிழ்நாடு பெண்கள் வேலைவாய்ப்பு மற்றும் பாதுகாப்பு திட்டத்தின் இயக்குநர் பொறுப்பையும் கூடுதலாக கவனிப்பார்கள். அதேபோல், சமூக நலத்துறை செயலர் ஜெய முரளிதரன், மாற்றுத் திறனாளிகள் நலத்துறை செயலர் பொறுப்பையும், தமிழ்நாடு சாலை பகுதி திட்டம் -2 திட்ட
இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ள பாஸ்கர பாண்டியன், சென்னை - கன்னியாகுமரி தொழில் வழித்தட திட்ட இயக்குநர் மற்றும் தமிழ்நாடு சாலைமேம்பாட்டு நிறுவன மேலாண் இயக்குநர் பொறுப்புகளையும் கூடுதலாக கவனிப்பார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in