சென்னை மெட்ரோ ரயில் சுற்றுலா அட்டை நிறுத்தம் - இனி..? 

சென்னை மெட்ரோ ரயில் சுற்றுலா அட்டை நிறுத்தம் - இனி..? 
Updated on
1 min read

சென்னை: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் சுற்றுலா அட்டை நிறுத்தப்படுகிறது. இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்ட தகவல்: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின், ஒருநாள் சுற்றுலா அட்டை மற்றும் 30 நாள் சுற்றுலா அட்டை பிப்.1-ம் தேதி முதல் நிறுத்தப்படுகிறது.

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அனைத்து பயணிகளுக்கும் தடையற்ற மற்றும் எளிமையான பயணங்களை வழங்கி வருகிறது. சுற்றுலா அட்டைகள் இனி பயன்படுத்த முடியாது என்றாலும், பயணிகள் தங்கள் பயணத் தேவைகளுக்கு டிஜிட்டல் பயணச்சீட்டு முறைகள், க்யூஆர் குறியீடு அடிப்படையிலான பயணச்சீட்டுகள், ஒருமுறை பயண டோக்கன்கள் மற்றும் தேசிய பொது போக்குவரத்து அட்டை உள்ளிட்ட மாற்று பயணச்சீட்டுகளை பயன்படுத்தி மெட்ரோ ரயில்களில் தொடர்ந்து பயணிக்கலாம்.

தேசிய பொது போக்குவரத்து அட்டை இப்போது மாநகர போக்குவரத்து கழக பேருந்துகளுடன் ஒருங்கிணைக்கப்பட்டு, தடையற்ற பயண அனுபவத்தை வழங்குகிறது. மெட்ரோ பயண அனுபவத்தை மேம்படுத்துவதற்கும், எதிர்காலத்தில் பயணிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் தேவைகளை சிறப்பாகப் பூர்த்தி செய்வதற்கும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் முழு முயற்சி எடுத்து வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, சிங்கார சென்னை பயண அட்டையை பேருந்து, மெட்ரோ ரயில்கள், மெட்ரோ அமைப்புகள் உள்ளிட்ட பல போக்குவரத்து பரிவர்த்தனைகளுக்கும் பயன்படுத்தும் வசதி அதிகரித்துள்ளது. ஏற்கெனவே, மெட்ரோ ரயில் பயணத்துக்கு பயன்படுத்தும் வகையில், சிங்கார சென்னை ஸ்மார்ட் அட்டை 2023-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in