தொழுகை நடத்த திருப்பரங்குன்றம் செல்ல முயன்ற வேலூர் இப்ராஹிம் மனைவியுடன் கைது

தொழுகை நடத்த திருப்பரங்குன்றம் செல்ல முயன்ற வேலூர் இப்ராஹிம் மனைவியுடன் கைது
Updated on
1 min read

மதுரை: பாஜக சிறுபான்மை பிரிவு தேசிய செயலாளராக இருப்பவர் வேலூர் இப்ராஹிம். இவரது பிறந்தநாளையொட்டி மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் தரிசனம் மற்றும் மலைமேலுள்ள சிக்கந்தர் தர்கா பள்ளிவாசலில் சிறப்பு தொழுகை மேற்கொள்ள திட்டமிட்டார். இதற்காக தனது மனைவியுடன் நேற்று மதுரை வந்த அவர், பிற்பகலில் மனைவியுடன் காரில் திருப்பரங்குன்றம் நோக்கிச் சென்றார்.

இந்நிலையில் மதுரை-திருமங்கலம் ரோட்டில் தனக்கன்குளம் அருகே காவல் உதவி ஆணையர் குருசாமி தலைமையில் ஆய்வாளர் மதுரைவீரன் உள்ளிட்ட போலீஸார் இப்ராஹிம் வந்த காரை தடுத்து நிறுத்தினர். இதுபற்றி தகவல் அறிந்த பாஜகவினர் சிலரும் அங்கு வந்தனர். திருப்பரங்குன்றம் மலைமேலுள்ள தர்காவுக்கு செல்ல தடை இருப்பதாலும், சட்டம், ஒழுங்கு காரணமாகவும் அங்கு போகக்கூடாது என அவரிடம் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இது தொடர்பாக இரு தரப்பிலும் வாக்குவாதம் ஏற்பட்டது. இருப்பினும், தடையை மீறி செல்வேன் எனக் கூறியதால் இப்ராஹிம், அவரது மனைவி மற்றும் பாஜக சிறுபான்மை பிரிவு பொதுச் செயலாளர் கல்வாரி தியாகராஜன், மாநிலச் செயலாளர் சிரில் ராயப்பன் உள்ளிட்டோரை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீஸார் கைது செய்தனர். அப்போது இப்ராஹிம் தமிழக அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். கைது செய்யப்பட்ட அவர்களை அப்பகுதியிலுள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in