பாஜக மாவட்ட தலைவர்கள் 2-வது பட்டியல் வெளியீடு

பாஜக மாவட்ட தலைவர்கள் 2-வது பட்டியல் வெளியீடு
Updated on
1 min read

சென்னை: தமிழக பாஜக மாவட்டத் தலைவர்களின் இரண்டாம்கட்ட பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

பாஜகவில் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிர்வாகிகள் புதிதாகத் தேர்வு செய்யப்படுவர். 6 ஆண்டுகளுக்கு ஒருமுறை உறுப்பினர் சேர்க்கை புதுப்பிக்கப்படும். இதுதவிர, புதிய உறுப்பினர் சேர்க்கையும் நடக்கும். அந்த வகையில், தமிழக பாஜகவில் கடந்த செப்டம்பர் மாதம் உறுப்பினர் சேர்க்கை பணிகள் தொடங்கின.

இதையடுத்து, உட்கட்சித் தேர்தல் மூலமாக, கிளை தலைவர், மண்டல தலைவர், மாவட்டத் தலைவர் என பல்வேறு பதவிகளுக்கு நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். அதன்படி, தமிழக பாஜகவில் உள்ள 68 ஆயிரம் கிளைகளில் 47 ஆயிரம் கிளைகளுக்கும், 1,231 ஒன்றியங்களில் 950 ஒன்றியங்களுக்கும் தலைவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இதில், தமிழக பாஜகவில் உள்ள 67 மாவட்டங்களில் 33 மாவட்டங்களுக்கு முதல்கட்டமாக தலைவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதையடுத்து இரண்டாம் கட்ட தலைவர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது.

அதன்படி, திருப்பூர் வடக்கு - சீனிவாசன், திருப்பூர் தெற்கு - மோகனப்பிரியா, ஈரோடு வடக்கு - செந்தில்குமார், ஈரோடு தெற்கு - செந்தில், கிருஷ்ணகிரி மேற்கு - நாராயணன், கரூர் - செந்தில்நாதன், தருமபுரி - சரவணன், திண்டுக்கல் மேற்கு - ஜெயராமன், ராணிப்பேட்டை - ஆனந்தன், புதுக்கோட்டை மேற்கு - ராமச்சந்திரன், சேலம் மேற்கு - ஹரிராமன், சேலம் கிழக்கு - சண்முகநாதன், நாகப்பட்டினம் - விஜயேந்திரன், பெரம்பலூர் - முத்தமிழ்செல்வன், விருதுநகர் மேற்கு - சரவணதுரை, திருவண்ணாமலை வடக்கு - கவிதா ஆகியோர் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in