மொழிப்​போர் தியாகிகள் நினை​வுநாள்: 26 இடங்​களில் பொதுக்​கூட்​டத்​துக்கு மதிமுக ஏற்பாடு

மொழிப்​போர் தியாகிகள் நினை​வுநாள்: 26 இடங்​களில் பொதுக்​கூட்​டத்​துக்கு மதிமுக ஏற்பாடு

Published on

சென்னை: மொழிப்போர் தியாகிகள் நினைவுநாளையொட்டி, தமிழகம் முழுவதும் 26 இடங்களில் பொதுக்கூட்டத்துக்கு மதிமுக ஏற்பாடு செய்துள்ளது.

இதுதொடர்பாக கட்சித் தலைமையகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: ஜன.26-ம் தேதி மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, அன்றைய தினம் காலை சென்னை, மூலக்கொத்தளத்தில் உள்ள மொழிப்போர் தியாகிகள் நினைவிடத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மரியாதை செலுத்துகிறார்.

இதைத் தொடர்ந்து மாலையில் விருகம்பாக்கத்தில் உள்ள மொழிப்போர் தியாகி அரங்கநாதன் நினைவிடத்தில் வைகோ அஞ்சலி செலுத்துகிறார். தொடர்ந்து ஜாபர்கான்பேட்டையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கூட்டத்தில் பங்கேற்று வீரவணக்க நாள் உரையாற்றவுள்ளார்.

இதேபோல், தமிழகம் முழுவதும் 26 இடங்களில் மதிமுக சார்பில் பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, கோவையில் கட்சியின் அவைத் தலைவர் ஆடிட்டர் ஆ.அர்ஜுனராஜ், மதுரையில் பொருளாளர் மு.செந்திலதிபன், திருச்சியில் முதன்மைச் செயலாளர் துரை வைகோ எம்.பி., உள்ளிட்டோர் பங்கேற்று உரையாற்றுக்கின்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in