Published : 23 Jan 2025 06:00 AM
Last Updated : 23 Jan 2025 06:00 AM

பால் முகவர்களிடம் மோசடி செய்யும் மர்ம நபர்கள் மீது நடவடிக்கை: சென்னை காவல்துறைக்கு நலச்சங்கம் வேண்டுகோள்

சென்னை: சென்னையில் பால் முகவர்களை திட்டமிட்டு ஏமாற்றி, மோசடி செய்யும் மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு தமிழக பால் முகவர்கள் நலச்சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது குறித்து தமிழக பால் முகவர்கள் நலச்சங்க தலைவர் பொன்னுசாமி வெளியிட்ட அறிக்கை: சென்னை மாநகரின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள பால் முகவர்களின் கடைகளுக்கு அதிகாலை நேரத்தில் டுவீலரில் வரும் மர்மநபர், மாநகராட்சி பணியாளர் என கூறிக் கொண்டு, உங்கள் பகுதியில் மழைநீரில் வடிகால் கால்வாய் அமைக்கும் பணிகள் நடப்பதாகவும், அந்த பணியில் ஈடுபட்டுள்ள பொக்லைன் எந்திரத்தின் பெல்ட் அறுந்து விட்டதாகவும் தற்போது உதவி பொறியாளரை தொடர்பு கொள்ள முடியவில்லை எனக் கூறி ரூ.2,000-ம் முதல் ரூ.5,000-ம்வரை கேட்டு ஏமாற்றி வாங்கிச் செல்லும் மோசடி நிகழ்வுகள் கடந்த ஓராண்டு காலமாகவே நடைபெற்று வருகிறது. இதுபோல, ஒரு சம்பவம் அண்மையில் நடைபெற்றுள்ளது.

பணம் பறிக்க முயற்சி: பால் முகவர்கள் நலச்சங்கத்தின் மாநில துணைத் தலைவரும், சென்னை, எம்.ஜி.ஆர் நகர், ஜாபர்கான்பேட்டை பகுதியைச் சேர்ந்த பால் முகவருமான எஸ்.பால்துரை கடந்த 19-ம் தேதி பால் விநியோகத்துக்கு சென்றி ருந்தார்.

அப்போது, இவரது மகனிடம் மர்மநபர் ஒருவர், பால், தயிர் வேண்டும் என்று கேட்டு, ஏமாற்றி பணம் பறிக்க முயற்சித்தது தெரியவந்துள்ளது. இது போன்ற மோசடி பேர் வழிகளை அடையாளம் கண்டு, இவர்கள் மீது காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x