“கலெக்‌ஷன், கமிஷன், கரப்ஷன் மட்டுமே செந்தில் பாலாஜிக்கு தெரியும்!” - ஆர்.பி.உதயகுமார்

ஆர்.பி.உதயகுமார்
ஆர்.பி.உதயகுமார்
Updated on
1 min read

மதுரை: ‘‘செந்தில் பாலாஜிக்கு தெரிந்தது எல்லாம், கலெக்‌ஷன், கமிஷன், கரப்ஷன்’’ என்று சட்டசபை எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துளளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: “ஆட்சிக்கு ஆட்சி செந்தில் பாலாஜி கட்சி மாறி கொண்டே இருக்கிறார். அவர் எப்போதாவது, ஒரே கட்சியில் இருந்துள்ளரா? அதிமுகவில் தன்னை இணைத்துக் கொள்ள வேண்டும் என பலமுறை கேட்டு அதில் தோற்றுப்போய்தான், பிளாக்கில் டிக்கெட் பெற்று திமுகவில் இணைந்தார். அங்கு அவரது இடத்தை தக்க வைத்துக் கொள்ள அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமியை விமர்சித்து பேசுகிறார்.

தமிழ் நாகரிகம் இல்லாத வகையில் பேசினால் அவர் பெரும் விளைவுகளை சந்திக்க நேரிடும். அவரிடத்தில் கொள்ளையடித்த பணம் இருக்கலாம். ஒரு நாளைக்கு பாட்டிலுக்கு பத்து ரூபாய் என ஒரு நாளைக்கு பத்து கோடி வசூல் செய்து கொடுப்பவர் என்பதால் அவர் வல்லவராக முடியாது. சேவை என்பதற்கான இலக்கணமே தெரியாதவர் செந்தில் பாலாஜி. அவரை அருகில் இருந்து பார்த்தவன் என்ற முறையில் நான் நன்கு அறிவேன்.

அதிமுகவில் இருந்தபோது திமுகவை பற்றி எவ்வளவு அவதூறாக பேசினார். கொள்ளைக் கூடாரம் கருணாநிதி குடும்பம் என செந்தில் பாலாஜி சொன்னாரா? இல்லையா? அது எப்படி மதிப்பிழந்து போனதோ அதேபோல் இந்த பேச்சும் மதிப்பிழந்து போகும். தமிழக முதல்வர் ஸ்டாலின் கரூர் சென்று செந்தில் பாலாஜியை எப்படி பேசினார். இன்று அதே முதல்வர் எப்படி பேசுகிறார். அப்படியென்றால் அரசியல் வியாபாரி யார்? அரசியல் என்றால் சேவை. மக்கள் பணி. ஆனால், செந்தில் பாலாஜிக்கு தெரிந்தது எல்லாம், கலெக்‌ஷன், கமிஷன், கரப்ஷன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in