பெங்​களூரு சுயேச்சை வேட்​பாளர் மனு நள்ளிர​வில் தள்ளுபடி: ஈரோடு கிழக்​கில் 46 வேட்​பாளர்கள் போட்டி

பத்மாவதி (அடுத்த படம் ) பெங்களூருவைச் சேர்ந்த சுயேச்சை வேட்பாளர் பத்மாவதியின் மனுவை  தள்ளுபடி செய்யக்கோரி, ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று  முன்தினம் இரவு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சுயேச்சை வேட்பாளர்கள் நூர்முகமது, பத்மராஜன், அக்னி ஆழ்வார்.
பத்மாவதி (அடுத்த படம் ) பெங்களூருவைச் சேர்ந்த சுயேச்சை வேட்பாளர் பத்மாவதியின் மனுவை தள்ளுபடி செய்யக்கோரி, ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று முன்தினம் இரவு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சுயேச்சை வேட்பாளர்கள் நூர்முகமது, பத்மராஜன், அக்னி ஆழ்வார்.
Updated on
2 min read

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகு​தி​யில் போட்​டியிட மனு தாக்கல் செய்திருந்த பெங்​களூரு​வைச் சேர்ந்த சுயேச்சை வேட்​பாளர் பத்மாவ​தி​யின் வேட்​புமனு நேற்று முன் தினம்நள்ளிரவு தள்ளுபடி செய்​யப்​பட்​டது. இதையடுத்து, ஈரோடு தேர்தல் களத்​தில் போட்​டி​யிடும் வேட்​பாளர்​களின் எண்ணிக்கை 46-ஆக குறைந்​துள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதி வாக்​குப்​ப​திவு பிப்.5-ம் தேதி நடைபெற உள்ள நிலை​யில், 58 வேட்​பாளர்கள் மனு தாக்கல் செய்திருந்​தனர். 3 மனுக்கள் தள்ளுபடி செய்​யப்​பட்டன. 8 வேட்​பாளர்கள் மனுக்​களைத் திரும்பப் பெற்​றனர். இதையடுத்து, திமுக, நாம் தமிழர் கட்சி வேட்​பாளர்கள் உள்பட 47 பேர் போட்​டியிட உள்ளதாக தேர்தல் நடத்​தும் அலுவலர் மணீஷ் நேற்று முன் தினம் மாலை தெரி​வித்​தார்.

தொடர்ந்து, வேட்​பாளர்​களுக்கு சின்னம் ஒதுக்​கும் பணி நடந்​தது. திமுக வேட்​பாளர் வி.சி.சந்​திரகு​மாருக்கு உதயசூரியன், நாதக வேட்​பாளர் சீதாலட்​சுமிக்கு மைக் சின்னம் ஒதுக்​கப்​பட்​டது. தொடர்ந்து, பதிவு செய்​யப்​பட்ட அரசியல் கட்சி​யினர் மற்றும் சுயேச்சை வேட்​பாளர்​களுக்கு சின்னம் ஒதுக்​கும் பணி நடந்​தது.

அப்போது, கர்நாடக மாநிலம் பெங்​களூரு கே.ஆர்​.புரம் சட்டப்​பேர​வைத் தொகு​தி​யைச் சேர்ந்த வி.பத்​மாவதி என்ற சுயேச்சை வேட்​பாளரின் மனு ஏற்கப்​பட்​டதற்கு, சுயேச்சை வேட்​பாளர்கள் நூர் முகமது, அக்னி ஆழ்வார், பத்ம​ராஜன் ஆகியோர் எதிர்ப்புத் தெரி​வித்து, தர்ணா போராட்​டத்​தில் ஈடுபட்​டனர்.

தேர்தல் ஆணைய விதி​முறை​களின்​படி, மக்களவை, மாநிலங்​களவைக்கு எந்த மாநிலத்​தில் இருந்​தும் போட்​டி​யிடலாம். ஆனால், சட்டப்​பேர​வைத் தொகு​திக்கு அந்த மாநிலத்​தைச் சேர்ந்​தவர் மட்டுமே போட்​டியிட முடி​யும் என்று அவர்கள் தெரி​வித்​தனர்.

இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட தேர்தல் நடத்​தும் அலுவலர் ராஜகோபால் சுன்​கரா, மாநக​ராட்சி அலுவல​கத்​துக்கு வந்து, ஆலோசனை நடத்​தினார். மேலும், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி உள்ளிட்​டோருட​னும் ஆலோசனை நடத்​தினார்.

நள்ளிரவு வரை வேட்​பாளர் பட்டியலை இறுதி செய்​வ​தில் சிக்கல் ஏற்பட்​டது. பின்னர், சுயேச்சை வேட்​பாளர் பத்மாவ​தி​யின் வேட்​புமனு தள்ளுபடி செய்​யப்​பட்​டதாக அதிகாரப்​பூர்​வமாக அறிவிக்​கப்​பட்​டது. இதையடுத்து, தேர்​தலில் போட்​டி​யிடும் 46 பேரின் விவரங்கள் மாநக​ராட்சி அலுவல​கத்​தில் ஒட்டப்​பட்டன.

அமைச்சர் விளக்கம்: ஈரோட்​டில் நேற்று திமுக வேட்​பாளர் வி.சி.சந்​திரகு​மாரை ஆதரித்​துப் பிரச்​சாரம் மேற்​கொண்ட அமைச்சர் முத்​துசாமி, “நாம் தமிழர் கட்சிப் பிரச்​சா​ரத்​தில் தலையிடு​வதோ, தடுப்பதோ எங்கள் நோக்​கமில்லை. இடைத்​தேர்தலை தேர்தல் ஆணையம்​தான் நடத்து​கிறது. எனவே, எங்கள் மீது யாரும் குறை கூறக்​கூடாது. பிரச்​சா​ரத்​தின்​போது ஆரத்தி எடுப்​ப​தற்கோ அல்லது வாக்​களிப்​ப​தற்கோ பணம் கொடுப்பது தவறு. திமுக​வினர் இவற்றை செய்​யக்​கூடாது என்று
வலியுறுத்தி வருகிறோம்” என்றார்.

திமுக​வில் இணைந்​த சுயேச்சை: இடைத்​தேர்தலை புறக்​கணிப்​பதாக அதிமுக அறிவித்​திருந்த நிலை​யில், ஈரோடு மாநகர எம்ஜிஆர் இளைஞரணி இணைச் செயலாளர் செந்​தில் முருகன் சுயேச்​சையாக மனு தாக்கல் செய்​த​தால், கட்சி​யில் இருந்து நீக்​கப்​பட்​டார். இதையடுத்து, நேற்று முன்​தினம் வேட்​புமனு​வைத் திரும்பப் பெற்ற அவர், நேற்று காலை அமைச்சர் முத்​துசாமி முன்னிலை​யில் திமுக​வில் இணைந்​தார். திமுக வேட்​பாளர் சந்திரகு​மாரை ஆதரித்​துப் பிரச்​சா​ரத்​தில் ஈடுபட உள்ளதாக அவர் தெரி​வித்​தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in