ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் அமைச்சர் முத்துசாமியை முற்றுகையிட்ட வாக்காளர்கள்

ஈரோடு அன்னை சத்யா நகரில் அடிப்​படைப் பிரச்​சினை​களுக்கு தீர்வு கோரி அமைச்சர் ​முத்​துசாமியை ​முற்​றுகை​யிட்​ட பொதுமக்கள்.
ஈரோடு அன்னை சத்யா நகரில் அடிப்​படைப் பிரச்​சினை​களுக்கு தீர்வு கோரி அமைச்சர் ​முத்​துசாமியை ​முற்​றுகை​யிட்​ட பொதுமக்கள்.
Updated on
1 min read

ஈரோடு/சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி பிரச்​சா​ரத்​தின்​போது, பல்வேறு பிரச்​சினைகளை முன்னிறுத்தி அமைச்சர் முத்​துசாமியை வாக்​காளர்கள் முற்றுகை​யிட்​ட​தால் பரபரப்பு ஏற்பட்​டது.

இத்தொகு​தி​யில் திமுக சார்​பில் போட்​டி​யிடும் வி.சி.சந்​திரகு​மாருக்கு ஆதரவாக அமைச்சர் முத்​துசாமி தலைமையிலான திமுக​வினர் வீடு, வீடாகச் சென்று வாக்கு சேகரித்து வருகின்​றனர்.

இதன்​படி, அன்னை சத்யா நகரில் நேற்று காலை வேட்​பாளர் சந்திரகு​மாருடன், அமைச்சர் முத்​துசாமி பிரச்​சா​ரத்​தைத் தொடங்​கினார். அப்போது, “ஆக்​கிரமிப்பு என்று கூறி எங்கள் வீட்டை இடித்தது தொடர்பாக பலமுறை மனு கொடுத்​தோம். யாரும் வந்து பார்க்க​வில்லை. இப்போது வாக்கு கேட்டு வந்தால், எப்படி வரவேற்​போம்” என்று ஒருவர் கேள்வி எழுப்ப, அமைச்சர் முத்​துசாமி அதிர்ச்சி அடைந்​தார்.

இதேபோல, அப்பகு​தி​யினர், தங்களுக்கென கட்டப்​பட்ட மாற்று குடி​யிருப்​பில் வீடுகள் ஒதுக்​கீடு செய்​வ​தில் உள்ள குளறு​படிகளைத் தெரி​வித்​தும், அடிப்படை வசதிகள் கோரி​யும் அமைச்சரை முற்றுகை​யிட்​டனர்.

2011 தேர்​தலில் தேமு​திக சார்​பில் சந்திரகு​மார் போட்​டி​யிட்டு வெற்றி பெற்​றார். அதை ஞாபகத்​தில் வைத்​துக் கொண்டு ஒரு பெண், “கடந்த முறை வெற்றி பெற்​ற​போது நன்றி சொல்​லக்கூடவரவில்லை. இந்த முறை​யாவது வெற்றி பெற்​றால் தொகு​திப் பக்கம் வாருங்​கள்’ என்றார்.

தொடர்ந்து அமைச்சர் முத்​துசாமி வாக்​காளர்​களிடம் பேசும்​போது, “சத்யா நகர் பகுதி மக்களுக்கு குடி​யிருப்பு ஒதுக்​கீடு, அடிப்படை வசதி​கள், பட்டா, மகளிர் உரிமைத்​தொகை போன்ற பிரச்​சினைகள் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்​கப்​படும்” என்றார்.

நாதக வேட்​பாளர் குற்​றச்​சாட்டு: ஈரோட்​டில் வாக்கு சேகரித்த நாம் தமிழர் கட்சி வேட்​பாளர் சீதாலட்​சுமி செய்தி​யாளர்​களிடம் கூறும்​போது, “வாக்​காளர்​களைச் சந்தித்து பிரச்​சாரம் மேற்​கொள்ள எனக்கு அனுமதி மறுக்​கின்​றனர். ஒலிபெருக்கி பயன்​படுத்​த​வும், வாகனப் பிரச்​சா​ரத்​துக்​கும் காவல் துறை அனுமதி அளிப்​ப​தில்லை. தேர்தல் பிரச்​சா​ரத்தை தடுக்​கும் வகையில் வழக்​குகளை பதிவு செய்து மிரட்டு​கின்​றனர். இதுகுறித்து தேர்தல் பார்​வை​யாளரிடம் மனு அளிப்​போம்” என்றார்.

அதிமுக நிர்​வாகி நீக்கம்: அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி நேற்று வெளி​யிட்ட அறிக்கை​யில், “ஈரோடு மாநகர் மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி இணைச் செயலா​ளராக இருந்த பி.செந்​தில்​கு​மார், அதிமுக​வின் கொள்கை, குறிக்​கோள் மற்றும் கோட்​பாடு​களுக்​கும் முரணான வகையில் செயல்​பட்​டுள்​ளார். கட்சி கட்டுப்​பாட்டை மீறி​யும், தலைமை எடுத்த முடிவுக்கு மாறாக​வும் ஈரோட்டில் சுயேச்​சை​யாகப் போட்​டி​யிட்டு, கட்சிக்கு களங்​க​மும், அவப்​பெயரும் உண்
டாகும் விதத்​தில் செயல்​பட்​டுள்​ளார். எனவே, அவர் கட்சி​யின் அடிப்படை உறுப்​பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்பு​களில் இருந்​தும் நீக்​கப்​படு​கிறார்” என்று தெரி​வித்​துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in