பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி 25-ம் தேதி வரை நீட்டிப்பு

பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி 25-ம் தேதி வரை நீட்டிப்பு
Updated on
1 min read

சென்னை: பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும் பணி வரும் 25-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.

பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணியை கடந்த 9-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழகம் முழுவதும் 34,793 நியாய விலைக்கடைகளில் 2 கோடியே 20 லட்சத்து 94 ஆயிரத்து 585 அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்கள், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.

ஜனவரி 18-ம் தேதி வரை 1 கோடியே 87 லட்சத்து 14 ஆயிரத்து 464 குடும்ப அட்டைதாரர்கள், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்பட் டுள்ளது. இதுவரை 85 சதவீதம் பணிகள் நிறைவு பெற்றுள்ளன. மீதமுள்ள பயனாளிகளுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும் பணி வரும் 25-ம்- தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in