தடை செய்யப்பட்ட கஞ்சா, செல்போன் சிறைக்குள் வருவது எப்படி? - அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு

தடை செய்யப்பட்ட கஞ்சா, செல்போன் சிறைக்குள் வருவது எப்படி? - அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு
Updated on
1 min read

சென்னை: தடை செய்யப்பட்ட கஞ்சா, செல்போன் போன்ற பொருட்கள் சிறைக்குள் வருவது எப்படி என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய சிறைத்துறை டிஜிபி-க்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொலை வழக்கில் கைதாகி புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பன்னா இஸ்மாயில் மற்றும் பிலால் மாலிக் ஆகியோர் சிறைத்துறை அதிகாரிகளால் கடுமையாக தாக்கப்பட்டதாகவும், அவர்களுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க உத்தரவிடக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் குடும்பத்தினர் மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.

முறையான சிகிச்சை வேண்டும்: இந்த மனு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், வி, லட்சுமி நாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பி.புகழேந்தி, சிறைக்குள் செல்போன் வைத்திருந்ததாகக் கூறி இருவரையும் சிறைத்துறை அதிகாரிகள் கடுமையாக தாக்கியதாகவும், அவர்களுக்கு முறையான சிகிச்சை அளிக்க வேண்டும், என எனவும் கோரினார்.

அதற்கு மறுப்பு தெரிவித்த கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் இ. ராஜ்திலக், சிறைக்குள் திடீரென சோதனை நடத்தியபோது அவர்களிடமிருந்து செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. இதனால் சிறைத்துறை அதிகாரிகள் மீது பன்னா இஸ்மாயிலும், பிலால் மாலிக் மற்றும் பிரகாஷ் ஆகியோர் சேர்ந்து தாக்குதல் நடத்தியுள்ளனர். இருப்பினும் அவர்களுக்கு தேவையான மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது, என்றார்.

மருத்துவமனை டீனுக்கு உத்தரவு: அதையடுத்து நீதிபதிகள் மூவரது உடல் நிலை குறித்து ஆய்வு செய்து வரும் ஜன.21-க்குள் அறிக்கை தாக்கல் செய்ய ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை டீனுக்கு உத்தரவிட்டனர். மேலும், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள சிறைக்குள் தடைசெய்யப்பட்ட கஞ்சா, செல்போன் உள்ளிட்ட பொருட்கள் வந்தது எப்படி வருகிறது என்பது குறித்து சிறைத்துறை டிஜிபி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும், என உத்தரவிட்டு விசாரணையை ஜன.21-க்கு தள்ளி வைத்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in