அரிட்டாபட்டி உள்ளிட்ட கிராமங்களில் ‘டங்ஸ்டன் திட்ட எதிர்ப்பு’ கோலமிட்ட மக்கள்

அரிட்டாபட்டி உள்ளிட்ட கிராமங்களில் ‘டங்ஸ்டன் திட்ட எதிர்ப்பு’ கோலமிட்ட மக்கள்
Updated on
1 min read

மதுரை: மதுரை மேலூர் பகுதியில் டங்ஸ்டன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் வீட்டு வாசலில் ‘டங்ஸ்டன் திட்டம் வேண்டாம்" என்பதை வலியுறுத்தி கோலமிட்டனர்.

அரிட்டாபட்டி பகுதியில் டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைக்க மத்திய அரசு வேதாந்தாவின் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்துக்கு ஏலம் விட்டுள்ளது. இதை ரத்து செய்யக்கோரி அரிட்டாபட்டி பகுதி கிராமத்தினர், மேலூர் பகுதி மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழக அரசு வழங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்களை அரிட்டாபட்டி, நரசிங்கம்பட்டி கிராம மக்கள் ரேஷன் கடைகளில் வாங்காமல் புறக்கணித்தனர்.

இதனிடையே, ஜன. 13-ம் தேதி அரிட்டாபட்டி அருகே மீனாட்சிபுரம் கிராமத்தில் டங்ஸ்டன் சுரங்க திட்ட எதிர்ப்பு பொங்கல் விழாவை நடத்தவும், எதிர்ப்பு குலவையிடவும், கோலமிடவும் கிராம மக்கள் மற்றும் போராட்ட அமைப்பினர் திட்டமிட்டிருந்தனர். இதற்கு ஒத்தக்கடை போலீஸார் தடை விதித்தனர். இதனால் எதிர்ப்பு பொங்கல் விழா கொண்டாடப்படவில்லை.

அதே நேரம், ஜன. 14, 15, 16 ஆகிய 3 நாட்களாக வீட்டு வாசலில் டங்ஸ்டன் எதிர்ப்பு கோலங்களை இட்டு வருகின்றனர். அரிட்டாபட்டி, மீனாட்சிபுரம், நரசிங்கம்பட்டி, கம்பூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் தினமும் டங்ஸ்டன் எதிர்ப்புக் கோலமிட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் மாட்டுப் பொங்கல் தினத்தில் மாடுகளின் வயிற்றில் ‘டங்ஸ்டன் திட்டத்தை ரத்து செய்’ என்ற வாசகத்தை எழுதினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in