“சிறுமதியாளர்கள் சுருக்க நினைத்தாலும்” - சுதர்சன் பட்நாயக்கின் திருவள்ளுவர் மணல் சிற்பம் குறித்து முதல்வர் நெகிழ்ச்சி

“சிறுமதியாளர்கள் சுருக்க நினைத்தாலும்” - சுதர்சன் பட்நாயக்கின் திருவள்ளுவர் மணல் சிற்பம் குறித்து முதல்வர் நெகிழ்ச்சி
Updated on
1 min read

சென்னை: பிரபல மணல்சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக்கின் திருவள்ளுவர் மணல் சிற்பம் தொடர்பான புகைப்படத்தை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்

திருவள்ளுவர் தினம் புதன்கிழமை (ஜன.15) கொண்டாடப்பட்டதை முன்னிட்டு ஒடிசாவின் புகழ்பெற்ற மணல்சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக், குமரியில் உள்ள திருவள்ளுவர் சிலையை புரி கடற்கரையில் மணல் சிற்பமாக வடித்துள்ளார். இது சமூக வலைதளங்களில் வைரலானது.

சுதர்சன் பட்நாயக்கின் திருவள்ளுவர் மணல் சிற்பம் தொடர்பான பதிவை பகிர்ந்துள்ள முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், “சிறுமதியாளர்கள் சுருக்க நினைத்தாலும் பேரறிவால் பொலிகிறார் அய்யன் வள்ளுவர்.

மேலிருந்தும் மேலல்லார் மேலல்லர் கீழிருந்தும்
கீழல்லார் கீழல் லவர்” என்று குறிப்பிட்டுள்ளார்.

சிறுமதியாளர்கள் சுருக்க நினைத்தாலும் பேரறிவால் பொலிகிறார் அய்யன் வள்ளுவர்

மேலிருந்தும் மேலல்லார் மேலல்லர் கீழிருந்தும்
கீழல்லார் கீழல் லவர்.#திருவள்ளுவர்நாள் #வள்ளுவம்_போற்றுதும் #StatueOfWisdom https://t.co/tZc96T2luf

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in