பாலமேடு ஜல்லிக்கட்டு களத்தில் கவனம் ஈர்த்த ‘டங்ஸ்டன் எதிர்ப்பு’ பதாகை!

மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டுப் போட்டியை காண வந்த பார்வையாளர்கள் வைத்திருந்த டங்ஸ்டன் திட்ட எதிர்ப்பு பதாகை பலரது கவனம் ஈர்த்தது.
மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டுப் போட்டியை காண வந்த பார்வையாளர்கள் வைத்திருந்த டங்ஸ்டன் திட்ட எதிர்ப்பு பதாகை பலரது கவனம் ஈர்த்தது.
Updated on
1 min read

மதுரை: மதுரை மாவட்டம் பாலமேட்டில் இன்று (ஜன.15) நடந்த ஜல்லிக்கட்டு விழாவில் பார்வையாளர்கள் பகுதியிலில் இந்தவர்கள் ‘அரிட்டாபட்டியை காப்போம்’ என்ற பதாகையுடன் டங்ஸ்டன் திட்டத்துக்கு எதிராக குரல் எழுப்பியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

மதுரை மாவட்டம் பாலமேடு பேரூராட்சியில் இன்று (ஜன.15) ஜல்லிக்கட்டு விழா காலை 7.35 மணிக்கு தொடங்கியது. இதில் தமிழகம் முழுவதுமிருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட காளைகளும், 900-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர். ஜல்லிக்கட்டு விழாவைக் காண ஆயிரக்கணக்கானோர் பார்வையாளர்களாக வந்திருந்தனர்.

பார்வையாளர்கள் பகுதியிலிருந்த சிலர் ‘அரிட்டாபட்டியை பாதுகாப்போம்’ (SAVE ARITTAPATTI) என டங்ஸ்டன் திட்டத்துக்கு எதிராக பதாகை வைத்திருந்தனர். இந்தப் பதாகை அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. அரசு நடத்தும் ஜல்லிக்கட்டு விழாவில் டங்ஸ்டன் திட்டத்துக்கு எதிராக பார்வையாளர்கள் வைத்திருந்த பதாகையால் பரபரப்பு ஏற்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in