

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், நாதக சார்பில் சீதாலட்சுமி போட்டியிட உள்ளதாககூறப்படுகிறது. இதுகுறித்த அறிவிப்பு இன்று வெளியாகிறது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிப். 5-ம் தேதிநடக்கிறது. அதிமுக, பாஜக, தேமுதிக புறக்கணித்துள்ள நிலையில், திமுக சார்பில் சந்திரகுமார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், நாதக வேட்பாளரை சீமான், இன்று (ஜன.14) அறிவிக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளார். நாதக சார்பில் கொங்கு வேளாளர் சமுதாயத்தைச் சேர்ந்த சீதாலட்சுமி போட்டியிட உள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.